தேவையான பொருள்கள்
பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
தேங்காய் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - சிறிதளவு
* உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
* (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
* அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும்.
* நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில் தயார்செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் ஊற வைத்து சேர்த்து பரிமாறவும்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்