சுவையான ரோஸ் குக்கீஸ் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 300 கிராம்
முட்டை - 2 முட்டை
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 200 மி.லி
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து  நன்றாக கலந்துக் கொள்ளவும்.
 
அத்துடன், ஏலக்காயத் தூள், தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கலந்துக் கொள்ளவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ரோஸ் குக்கீஸ் அச்சு எடுத்து எண்ணெய்யில்விட்டு சூடு செய்யவும். பிறகு, அச்சு எடுத்து மாவில் முக்கி மீண்டும் எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ரோஸ் குக்கீஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments