தேவையான பொருட்கள்:
ரவை - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு ஏற்ப)
முந்திரி - 5
திராட்சை - 5
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - தேவைக்கு ஏற்ற
தண்ணிர் – 3 டம்ளர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும். கொதித்த தண்ணிரில்
ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.