Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பரான சுவையில் கேரட் அல்வா செய்ய !!

Advertiesment
சூப்பரான சுவையில் கேரட் அல்வா செய்ய !!
தேவையான பொருட்கள்:
 
கேரட் - 1 கிலோ
சர்க்கரை - 500 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 100 கிராம்
பாதாம் - 20 கிராம் (ஊறவைத்து தோல்நீக்கப்பட்டது)

செய்முறை:
 
* கேரட்டை தோல் சீவி நன்றாக துருவி கொள்ளவும். துருவிய கேரட்டை கொடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதியெடுத்து 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
 
* ஒரு கடாயினை சூடேற்றி, நெய் விடவும். அடுத்து அதில் வேகவைத்து கேரட், சர்க்கரை மற்றும் மீதமுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறவும்.
 
* நன்றாக சுருண்டு அல்வா பதம் வந்ததும் பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரித்து இறக்கவும். சுவையான கேரட் அல்வா தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தே கொண்ட சப்பாத்திக்கள்ளி !!