Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதமான சுவையில் பரங்கிக்காய் அல்வா செய்ய !!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (17:09 IST)
தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 கப்
உலர் திராட்சை - 8
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
குங்குமப்பூ - சிறிது



செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துருவிய பரங்கிக்காய் சேர்த்து மூடி வைத்து, 2 விசில் விட்டுக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, பரங்கிக்காயை ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வேக வைத்த பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, 5 நிமிடம் கழித்து அதில் 1 கப் பால் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் குங்குமப்பூ சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தீயை குறைத்து கலவை நன்கு கெட்டியாகி அல்வா போன்று வரும் வரை கிளறி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து பிரட்டி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

அதற்குள் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவின் மீது தூவினால், பரங்கிக்காய் அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments