நமது நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு வகையான பாசுந்தி ஸ்வீட் கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது செய்து மகிழ்வர்.
பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும். இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக இருக்கும்.
இந்த ரெசிபியை மிகவும் வேகமாகவும் எளிதாகவும் குறைந்த சமையல் நேரத்திலேயே செய்து விடலாம். எனவே இதை எப்பொழுதும் பார்டி சமயத்திலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மான ஸ்வீட் என்பதால் அவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். இதை உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போதும் செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர்.
இப்போது இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை காணலாம்
கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்
க்ரீம் மில்க் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
* நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
* பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக்
கொண்டே இருக்க வேண்டும்
* பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்
* இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும் இத்துடன் குங்குமப் பூ சேர்த்து கொண்டால் அழகான சுவையான கலர் கிடைக்கும்.
* பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்தால் பாசுந்தி ரெடி.