Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான அச்சு முறுக்கு செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1 கப்
மைதா மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
 
துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 
அரிசி மாவு , மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும்.
 
எண்ணெய்யை காயவைத்து அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும். கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெய்யில் விட்டு லேசாக அசைக்க வேண்டும். முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து பொன்னிறமாக வரும். பிறகு எண்ணெய்யை வடித்து  எடுக்கவேண்டும். சுவையான அச்சு முறுக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments