Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிப்பு தேங்காய் மோதகம் செய்ய....!

இனிப்பு தேங்காய் மோதகம் செய்ய....!
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 2 கப் 
மைதா மாவு - 1/2 கப் 
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப் 
தேங்காய் - 1 கப் (துருவியது) 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
நெய் - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு).

 
செய்முறை: 
 
முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்ற காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் வெல்லம், ஏலக்காய் மற்றும்  வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்தி தேய்பதில் தேய்த்து, அதன் நடுவே தேங்காய் கலவையை  சிறிது வைத்து மூட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய்  மோதகம் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!