Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டிலேயே செய்யலாம் சுவையான பேன் கேக்! Christmas Special pancakes!

Advertiesment
Pancake
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:23 IST)
கிறிஸ்துமஸ்கு சுவையான பேன் கேக்கை சில நிமிடங்களில் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 கப், முட்டை – 2, பால் – 1 1/2 கப், பேக்கிங் பவுடர் – அரை டீ ஸ்பூன், வெண்ணெய் – 2 ஸ்பூன், சர்க்கரை – 5 ஸ்பூன்


செய்முறை:

முதலில் முட்டைகளை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், வெண்ணெய், சர்க்கரை சேர்க்க வேண்டும்.

பின்னர் உருகிய வெண்ணையையும், பாலையும் அவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மாவில் சின்ன சின்ன கட்டி துண்டுகள் இருந்தால் பேன் கேக் உப்பி வரும். அதனால் சின்ன கட்டிகள் இருந்தால் அவை கரையுமளவுக்கு கலக்க வேண்டாம்.

ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்ற வேண்டும். பான்கேக் ஒட்டாமல் இருக்க எண்ணெய் அல்லது வெண்ணையை வாணலியில் தடவ வேண்டும். எண்ணெயில் சன் ப்ளவர் ஆயில் பயன்படுத்தினால் ஒட்டாமல் இருப்பதற்கு சரியாக இருக்கும்.

webdunia


பிறகு 3 டேபிள் ஸ்பூன் அல்லது வாணலி அளவை பொறுத்து மாவை ஊற்றி வட்டமாக தேய்க்க வேண்டும். குறைந்த அளவு மாவை ஊற்றுவது நல்லது. ஏனென்றால் பின்னர் உப்பி பெரிதாகும்.

பேன்கேக்கை 2 நிமிடங்கள் அல்லது அதன் ஓரங்கள் பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும். பின்னர் திருப்பி போட வேண்டும். இப்படியாக ஒவ்வொரு பேன் கேக்காக செய்ய வேண்டும்.

பேன் கேக்குகள் செய்த பின் அவற்றின் மீது பழங்கள், சாக்லேட் சிப்ஸ், ஜாம் அல்லது சிரப் என உங்களுக்கு விருப்பமான ஐட்டங்களை தூவி சாப்பிடலாம். விருந்தினர்களுக்கும் கொடுக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?