Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடிகார முள்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?

Advertiesment
கடிகார முள்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?
, ஞாயிறு, 17 ஜூலை 2016 (18:14 IST)
கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாக சுற்றிவரும், இதனை கடிகார திசை என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் பூமியின் சுழற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
ஒவ்வொரு மணி துளியும், ஒவ்வொரு நிமிடமும் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே கருதப்படுகிறதுது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற அளவு பலருக்கும் போதாது என்ற நிலையும் ஏற்படுவதாக கூறிவருகின்றனர்.
 
கடிகார சுழற்சி குறித்து எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. அதாவது வலப்புறமாக தான் சுற்றிவரும், இதனை கடிகார திசை(Clockwise) என்று கூறுவது உண்டு.
 
முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள்தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால் உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது.
 
சூரியனை, பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் வலப்புறமாக சுற்றுகிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இடதுபுறத்தில் இருந்து(கிழக்கு) சூரியன் வலதுபுறமாக(மேற்கு), அதாவது கடிகார திசையில் சுழலுவது போல் தோன்றும். இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சூரியனின் நிழல் நகர்வதை அடிப்படையாக கொண்டு கடிகார முள்களும் அந்த திசையிலேயே சுற்று வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிய இருவர் மீது துப்பாக்கிச் சூடு