Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணைய குற்றங்கள் குறித்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள்

இணைய குற்றங்கள் குறித்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள்
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:27 IST)
இணையதளத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பெருகி வரும் நிலையில், இணையம் பயன்படுத்தும் பெண்கள் கட்டாயம் இந்த சட்டப்பிரிவுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.


 
 
IT act section 66A:
 
ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். 
 
ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும். மூன்று வருட சிறை தண்டனை அளிக்கப்படும்.
 
IPC Section 509: 
 
தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து புகார் அளிக்கலாம்.
 
IPC Section 499: 
 
ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். ஃபோட்டோ இருக்குமிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஆதாரமாக கொடுக்கலாம்.
 
இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூனியக்கார விஷால்.. என்னையும் நடிகர் சங்கத்திலிருந்து தூக்கி விடு : நடிகை ராதிகா சாடல்