Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டாள் ஆமை

Advertiesment
முட்டாள் ஆமை
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (17:02 IST)
அழகிய ஏரியில் ஆமை ஒன்று தனது இரு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.



 

 
வாத்துக்கள் வருத்தத்துடன் இருந்ததை கண்ட ஆமை “ஏன் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.
 
”பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏரிக்கு வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும்.  எனவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”. என்று வாத்துக்கள் கூறியது.
 
என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது.  நீர் குறைந்தால் உங்களுக்கு உணவுதான் குறையும்.  எனக்கோ உயிரே போய்விடும்.  என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றது ஆமை.
 
”உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றத வாத்து.
 
அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள்.  நான் நடுவில் என்னுடைய பற்களால் கெட்டியாய் பிடித்து கொள்கிறேன்.  நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை.
 
”நாங்கள் உயரபறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்’ என்று வாத்துக்கள் கூறியது.
 
அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் பேசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.
 
சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது.  இரு வாத்துகளும்  ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு, இல்லாவிட்டால் நீ கீழே விழுந்து விடுவாய்” என்று கூறியது.
 
செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து செல்வதை பார்த்த மக்கள் வாத்துக்கள் எதையோ தூக்கிக்கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது.  இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.
 
கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.
 
கதையின் நீதி:  வருமுன் காப்போனும், சமயோஜித புத்தி உடையவனும் சுகம் பெறுவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil