ஒரு நியுமரலாஜி ஜோசியர் இருந்தார். ராஜா கம்பெனி ஓனர் அவரை அனுகினார். ’நியுமரலாஜிப்படி ராஜா என்கிற நேம் சரியில்லை. தொட்ட தெல்லாம் தொளங்கனும்னா..’
’நேம் சேஞ்ச் பண்ணனும்’ என்றார்.
‘இப்ப ராஜா என்கிற பேர எடுத்துக்குவோம்..
RAJA,
R A J A
2 + 1 + 1 + 2 கூட்டுத்தொகை 6, ரெட்டபடையா வர்றதுனால, தர்த்தினியம் தாண்டவமாடும். நேம மாத்திடுங்க.’
என்ன பேரு வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்க?’
’மன்னா ன்னு வைங்க. ஏன்னா அதுக்கு கூட்டுத்தொகை 7, அமோகமா இருப்பீங்க’ என்றார்.
பீஸ் நூற்றி ஒண்ணு கொடுத்தார்.
101 +2 கூட்டுத்தொகை 2 வர்றதுனால, அமௌண்ட் சேஞ்ச் பண்ணுங்க என்றார். இவர் 201, கொடுத்தார். சபாஷ் கூட்டுத்தொகை 3, ராஜ யோகம் என வழியனுப்பி வைத்தார்.
ஜோசியர சந்திச்சுட்டு வந்த வேற ஒரு நபரை இவர் கேட்டார்.
’தட்சனை எவ்வளவு கொடுத்தீங்க?’
’501’
’வாங்கிக்கிட்டாரா? எதுவும் சொன்னாரா?’
’கையெடுத்து கும்பிட்டு வாங்கிட்டார்’ என்றார்.
கூட்டுத்தொகை 501+6, ரெட்டப்படையில வந்தும் வாங்குறார்னா?..
அமௌன்ட் அதிகமா இருக்கும் பொழுது..
ஒத்தப் படையாவது, ரெட்டைப் படையாவது.
நன்றி : Amir Razak