Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புனைகதை: எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு

Advertiesment
புனைகதை: எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு
, வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (12:38 IST)
மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட அறிவியல் புனை கதை-2009 போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.

இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.

அதன்படி, எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றது. இது ரூ.20 ஆ‌‌யிர‌ம் ரொ‌க்க‌ப் ப‌ரிசை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசையு‌ம், நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நளஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil