Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்-உம்பர்த்தோ ஈகோ

Advertiesment
நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்-உம்பர்த்தோ ஈகோ

Webdunia

நன்றி : காலச்சுவடு ஜன - மார்ச் 2000

1918 ல் என்னுடைய அம்மா வழி தாத்தா தன்னுடைய நாற்பதாவது வயதில் ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஒருவகை நச்சுக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். ஐரோப்பாவின் பெரும் பகுதியை அந்நோய் அப்போது கொன்றழித்துக் கொண்டிருந்தது. மூன்று மருத்துவர்களின் மிகச்சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் ஒரு வாரத்திற்குள் இறந்துவிட்டார். 1972 ல் என்னுடைய நாற்பதாவது வயதில் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு ஒப்பானதாகக் தோன்றிய ஒரு வகை நோயால் நான் பீடிக்கப்பட்டேன். பெனிசிலின் காரணமாக ஒரே வாரத்தில் நான் எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டேன். அணுசக்தி, விண்வெளிப் பயணம், மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை மறந்துவிட்டு, நம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக பெனிசிலினை நான் ஏன் விடாப்பிடியாகக் கருதுகிறேன் என்பதை இதனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (மேலும் கடந்த காலத்தில் ஐம்பது அல்லது அறுபது வயதில் இறந்து போயிருக்கக் கூடிய மனிதர்களை இன்று எண்பது வயதை அடைய வைக்கக் கூடிய எல்லா மருந்துகளையும் இதில் நான் பொதுவாகச் சேர்த்துக் கொள்கிறேன்.)

ஒரு நூற்றாண்டின் மிக முக்கியமான தொழில்நுட்ப கண்டுபிடிப்பையோ அல்லது விஞ்ஞானக் கண்டுபிடிப்பையோ தீர்மானிப்பது மிகக் கடினம். ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பின் தேதியைக் குறித்த நம்முடைய கருத்துக்கள் தெளிவாக இல்லாமையே இதற்குக் காரணம். இந்த நூற்றாண்டின் அதிசுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளாக பல பொருட்களை வாசகர்கள் பட்டியலிடக்கூடும். ஆனால் உண்மையில் அவை நம்முடையதுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து தொடங்குபவை. உதாரணமாக, தானியங்கி, விண் முட்டும் கட்டடம், சுரங்க நடைபாதை, டைனமோ டர்பைன் போன்றவை. தட்டச்சுப் பொறி, கிராமஃபோன், ஒலிப்பதிவுப் பொறி, தையல் எந்திரம், குளிர்பதனப் பெட்டி அகியவற்றோடு டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், சுத்தீகரிக்கப்பட்ட பால், சிகரெட் லைட்டர் (சிகரெட்டையும் சேர்த்து) நகரும் படிக்கட்டு, சலவை எந்திரம், அழிப்பான், மையொற்றும் தாள், மின் விசிறி, பாதுகாப்பான சவரக்கத்தி, மாஃபி கட்டில்1, முடிதிருத்துபவரின் நாற்காலி, பாதுகாப்பான தீக்குச்சி, மழை அங்கி, சேஃப்டி பின், காற்றூட்டப்பட்ட பானங்கள், காற்றடைத்த டயர்கள் மற்றும் கியர்கள் கொண்ட சைக்கிள்கள், மின்சார ட்ராம், செயற்கை நூலிழைகள், இவையெல்லாவற்றையும் விற்கும் பல்பொருள் அங்காடி - இன்னும் பட்டியலை நான் தொடர வேண்டுமானால் பின் வருவனவற்iயும் சேர்த்துக் கொள்ளலாம். மின்விளக்கு, தொலைபேசி, தந்தி, ரேடியோ, புகைப்படக் கலை மற்றும் சலனப் படங்கள், மேலும் ஒரு நிமிடத்தில் எண்ணற்ற கூட்டல்களைப் போடும் திறமை வாய்ந்ததும், கம்ப்யூட்டருக்கு இட்டுச் சென்ற பாதையில் நம்மை இருத்தியதுமான ஒரு கணக்குப்போடும் எந்திரத்தை பேபேஜ் கண்டுபிடித்தார்.

பல நூறு ஆண்டுகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கும் போது கணக்கிடுதல் மேலும் கடினமாகிறது. வெடிமருந்து மற்றும் திசைகாட்டும் கருவி ஆகியவற்றின் தோற்றத்தைக் கணக்கிட கட்டுக்கதைகளையே நாம் நம்ப வேண்டியுள்ளது. உதாரணமாக, பன்னிரண்டாம் நூற்றாண்டு ஓவியம் ஒன்றில் ஒரு கருவி சித்தரிக்கப்பட்டிருந்தால் அது அந்நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டும் என்று நாம் உறுதியாக நம்ப முடிந்தாலும்கூட, அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அக்கருவி இருந்திருக்கவில்லை என்று நம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது. இந்தப் பிரச்சனைகளை நான் எழுப்புவதற்குக் காரணம், நம்முடைய இந்த ஆயிரம் ஆண்டுக்காலத்தின் துவக்கத்தில் தோன்றிய சில கண்டுபிடிப்புகளைக் குறித்து நான் பிரஸ்தாபிக்க விரும்புவது தான். அக்கண்டுபிடிப்புகளில் சில யாருடைய கவனிப்பையும் பெறாமலேயே முந்தைய ஆயிரம் ஆண்டுக் காலத்தின் கடைசி இரண்டு நூற்றாண்டுகளில் தயக்கத்துடன் தோன்றியிருப்பதற்கும் வாய்ப்புண்டு. எப்படி இருந்தாலும், கடந்த ஆயிரம் ஆண்டுகளை மாற்றியவை இந்தக் கண்டுபிடிப்புக்கள்தான்.

நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம

-உம்பர்த்தோ ஈக

ஆயிரமாவது ஆண்டிற்குப் பிறகு வந்த முதல் நூற்றாண்டுகளில் சந்தேகத்திற்கே இடமில்லாத வகையில் உண்டான கண்டுபிடிப்புகளைப் பற்றி நான் பேச வேண்டியிருந்ததால் கப்பல் அல்லது படகின் பின்புறம் பொருந்தப்படும் சுக்கானைக் குறிப்பிடுவது என்னுடைய உடனடி ஆர்வமாக இருக்கும். ஆயவாடைனந என்ற அரசியின் கதை அல்லது க்ஷயலநரஒ கூயயீநளவசல2 (க்ஷயலநரஒ என்ற நகரத்தில் அதன் பிரதி பாதுகாக்கப்பட்டதால்) என்று அழைக்கப்படும் வரலாற்றின் அதி பிரபலமான சித்திரக்கதையைப் பாருங்கள். ஹேஸ்டிங்ஸ் என்ற இடத்தில் நடந்த யுத்தம் உள்ளிட்டு நார்மானியர்கள் இங்கிலாந்தில் வந்திறங்கியதைத் துல்லியமாக இக்கதை விவரிக்கிறது. இங்கிலாந்தை வென்றவனான நார் மண்டியின் வில்லியம் என்பவனின் துருப்புக்கள், ஸ்காண்டி நேவிய கடற் கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய படகுவகையில் இங்கிலாந்தில் வந்திறங்கியதையும், அவற்றில் சுக்கானுக்குப் பதிலாக படகுகளில் பின்புறப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒரு துடுப்பையும் அந்த சித்திரக் கதைகளில் நீங்கள் பார்க்கலாம். (உண்மையில், இக்கப்பல்கள் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு துடுப்புக்கள் கொண்டவை). 1066 வரை நாவாய்கள் இப்படித்தான் இயக்கப்பட்டன. ஆனால் இந்த பக்கவாட்டு சுக்கான்களைக் கொண்டு காற்றின் வலிமைக்கு ஈடுகொடுத்து கப்பலைச் செலுத்துவது சிரம சாத்தியமாக இருந்தது. கடல் கொந்தளிப்பின்போது அது மேலும் கடினமாக இருந்திருக்கும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் நவீன சுக்கான் மேம்படுத்தப்பட்டது. ஒரு கதவைப்போல கீல் மூலம் கப்பலின் பின்புறத்தில் பொருத்தப்பட்டு தண்ணீர்ப் பரப்புக்கு சற்று கீழே நகரும் அதை, கப்பல் தளத்தின் மேலுள்ள ஒரு தனி ஆள் ஒரு கைப்பிடி மூலம் இயக்கிவிட முடிந்தது. வழக்கம் போலவே இங்கும் தேதிகள் தெளிவாக இல்லை. ஆனால் கீல் மூலம் பொருத்தப்பட்ட சுக்கானுக்கும், கப்பலின் பின் புறத்தில் பொருத்தப்பட்ட துடுப்புக்கும் இடையிலான ஒன்று வின்செஸ்டர் தலைமைத் திருக்கோயிலில் உள்ள ஒரு புடைப்போவியத்தில் காணப்படுகிறது. க்ஷயலநரஒ கூயயீநளவசல க்குப் பின் வெறும் நூறு ஆண்டுகள் கழித்து 1180 ல் அது தொடங்குகிறது.

ஏன் இந்த சுக்கானுக்கு இத்தனை முக்கியத்துவம்? இந்தக் கண்டுபிடிப்பு நடந்திருக்காவிட்டால் கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருக்க முடியாது. இந்த ஆயிரம் ஆண்டுகளின் மீதி வரலாறும் வேறு மாதிரியாக ஆகியிருக்கலாம். இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தனித்தன்மை அளித்தவை என்ற அளவில் அல்லாது இக்காலப் பிரிவின் முடிவை நாம் கொண்டாட உதவி புரிந்தது என்ற முறையில் ஒரு கண்டுபிடிப்புத் தொடரைப் பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன். இக்கண்டுபிடிப்புக்கள் இல்லாவிட்டால் ஒருவேளை நாம் பிறந்திருக்கவே மாட்டோம்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாம் சரியாக வரலாற்றின் இடைநிலைக்காலத்தில் (ஆனைனடந ஹபநள) இருந்தோம். `இடைநிலைக்காலம்' என்ற பதச்சேர்க்கையே ஒரு கல்வி சார் நடைமுறைதான். உதாரணமாக, சில நாடுகளில் - இத்தாலியை உள்ளிட்டு - தாந்தே மற்றும் பெட்ராக் ஆகியோரின் காலத்தைக் குறிப்பிடும்போது கூட `இடைநிலைக் காலம்' என்ற சொற்றொடரை ஒரு எழுத்தாளர் பயன்படுத்துகிறார். பிற நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் இக்காலத்தை மறு மலர்ச்சிக்காலம் என்று குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க குறைந்தது இரண்டு `இடைநிலைக்காலங்கள்' இருப்பதாக நாம் சொல்லலாம் : ரோமப் பேரரசின் வீழ்ச்சி (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு)யில் தொடங்கி கி.பி. 999 வரை ஒன்று; கி.பி. 1000ல் தொடங்கி குறைந்தது 15-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது மற்றொன்று.

கி.பி. ஆயிரமாவது வருடத்துக்கு முந்தைய இடைநிலைக் காலத்தை இருண்ட காலம் என்று பொருத்தமாக அழைக்கலாம்; இப்பதம், ஐந்திலிருந்து பதினான்கு வரையிலான எல்லா நூற்றாண்டுகளையும் குறிப்பதற்காகக் கவனமின்றிப் பயன்படுத்தப்படுகிறது. `பொருத்தமாக' என்று நான் சொல்வது அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல மனித எரியூட்டல்களினால் அல்ல; ஏனென்றால் அதி நாகரிகமான 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளிலும் எரிதழல்களும், சிதைகளும் இருந்தன (கhந ளுஉயசடநவ டுநவவநசஐ நாம் மறந்துவிடக் கூடாது); அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைகள் பரவலாக இருந்த காரணத்தினாலும் அல்ல; ஏனென்றால், மூடநம்பிக்கைகளைப் பொருத்தவரை - வேறு காரணங்களுக்காக அவை இருந்தாலும் - நம்முடைய புதுயுகம் எந்தக் காலத்துக்கும் சளைத்ததல்ல.

ஐரோப்பாவை பல நூற்றாண்டுகளாக முற்றுகையிட்டு தாக்கி, ரோம நாகரிகத்தைப் படிப்படியாக அழித்த காட்டு மிராண்டிகளின் ஊடுருவல்கள் இக்காலகட்டத்தில் நடந்ததால் அதை இருண்ட காலம் என்று பொருத்தமாக அழைக்கலாம். சீர்குலைந்த நகரங்களைவிட்டு மக்கள் வெளியேறினார்கள்; பெரும் நெடுஞ்சாலைகள் புறக்கணிக்கப்பட்டு, களைமண்டி மறைந்து போயின; சுரங்கம் தோண்டுதல் மற்றும் கல்வெட்டியெடுத்தல் உள்ளிட்ட அடிப்படை தொழில் நுணுக்கங்கள் மறக்கப்பட்டன; பயிர் செய்வது கைவிடப்பட்டது; ஷார்ல மெயினின் (hயசடநஅயபநே) நிலமானிய சீர்திருத்தம் வரும் வரை முழு விவசாயப்பகுதிகளும் மீண்டும் வனங்களாயின.

இந்த அர்த்தத்தில் கி.பி. 1000 க்கு முந்தைய இடைநிலைக் காலம் வறுமை, பசி, பாதுகாப்பின்மை ஆகியவற்றின் காலமாக இருந்தது. இடைநிலைக் காலத்தின் அன்றாட வாழ்க்கை விவரங்களை நுணுக்கமாகப் பதிவு செய்த துயஉளூரநள டுந ழுடிகக என்பவர் தன்னுடைய `இடைநிலைக்கால மேற்கின் (ஐரோப்பாவின்) நாகரிகம்' என்ற புத்தகத்தில் மிகப் பிரபலமான கதைகள் மூலம் அக்காலம் எந்த அளவு வறுமையுற்றிருந்தது என்பதை விவரிக்கிறார். அப்படிப்பட்ட கதை ஒன்றில், ஒரு விவசாயி தவறுதலாகக் கிணற்றுக்குள் போட்டுவிட்ட அரிவாள் ஒன்றை மீட்டெடுக்க ஒரு ஞானி மாயமாகத் தோன்றுகிறார். இரும்பு அரிதாகிவிட்ட சகாப்தத்தில் ஓர் அரிவாளின் இழப்பு பயங்கரமானதாக இருந்திருக்கும்; விவசாயியால் அறுவடையைத் தொடர்ந்திருக்க முடியாது; அரிவாளின் கூர்ப்பகுதி ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று.

நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம


-உம்பர்த்தோ ஈக

மக்கள் தொகை குறைந்து உடல் ரீதியாக வலிமை குன்றிய போது, நிலப்பகுதி தொடர்பாக வரும் நோய்களாலும் (காசநோய், தொழுநோய், சீழ்ப்புண்கள், தோல்படை, கழலை) பிளேக் போன்ற பயங்கர கொள்ளை நோய்களாலும் மக்கள் அழிந்தனர். கடந்து போன நூற்றாண்டுகளில் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் ஈடுபடுவது எப்போதும் அபாயம் நிரம்பியது; ஆனாலும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வசித்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 1 கோடியே 40 லட்சத்திற்குக் குறைந்து போனது; வேறு சிலர் எட்டாம் நூற்றாண்டில் 1 கோடியே 70 லட்சம் மக்கள் இருந்தார்கள் என்று யூகிக்கிறார்கள். அருகிப் போன விவசாயம், குறைவான மக்கள் தொகையோடு சேர்ந்து அநேகமாக எல்லாரையும் ஊட்டச்சத்து குறைவர்களாக ஆக்கியது.

இரண்டாவது ஆயிரம் ஆண்டு தொடங்கியபோது எண்கள் மாறின. மக்கள் தொகை பெருகியது. 950 ல் இரண்டு கோடியே இருபது லட்சம் ஐரோப்பியர்கள் இருந்ததாக சில நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். வேறு சிலர் 1000 ல் நான்கு கோடியே இருபது லட்சம் என்று சொல்கிறார்கள். 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள் தொகை 6 கோடிக்கும் 7 கோடிக்கும் இடையில் ஊடாடியது. எண்ணிக்கைகள் மாறினாலும் ஒரு விஷயத்தில் ஒப்புமை தெரிகிறது; ஆயிரமாவது வருடத்திற்குப் பின் வந்த ஐந்து நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள் தொகை இரண்டு மடங்காகியுள்ளது. ஒருவேளை மூன்று மடங்காகவும் ஆகியிருக்கலாம்.

ஐரோப்பாவின் திடீர் உயர்வுக்கான காரணங்கள் இவை என்று குறிப்பாகச் சொல்வது கடினம்; பதினோராம் நூற்றாண்டுக்கும் இடையில் அரசியல் வாழ்க்கை, கலை, பொருளாதாரம், நாம் இனி பார்க்கப்போகும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டன. உடல் சக்தி மற்றும் கருத்துக்களில் உண்டான புது எழுச்சியை அக்கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். முதல் ஆயிரம் ஆண்டின் கடைசி வருடங்களில் பிறந்த துறவியான சுயனரடயhரள ழுடயாநச என்பவர் தன்னுடைய பிரபலமான ழளைவடிசயைசரஅ (வரலாறுகளின் ஐந்து புத்தகங்கள்' என்று ஆங்கிலத்தில் அறியப்படுவது) என்ற நூலை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதத் துவங்கினார். வாழ்க்கையைப் பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை; 1033ல் உண்டான பஞ்சத்தைப் பற்றிச் சொல்கையில், மிகவறிய உழவர்கள் மத்தியில் நிலவிய கொடிய நரமாமிசம் உண்ணும் பழக்கங்களை விவரிக்கிறார். ஆனால் ஆயிரமாவது ஆண்டு முதல் ஒரு புது வீரியம் கிளர்ந்தெழுவதையும், அது வரை மோசமாக இருந்த நடப்புக்கள் ஆக்கபூர்வமான திருப்பத்தை அடைவதையும் அவர் எப்படியோ உணர்ந்துவிட்டார்.

இடைநிலைக்காலத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இன்றும் தனித்துத் தெரியும் கவிதைமயமான ஒரு பத்தியில், முதல் ஆயிரம் ஆண்டின் முடிவில் வசந்தகாலப் புல்வெளியைப் போல பூமி திடீரென மலர்ந்து தழைத்ததை அவர் உணர்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறார் : `ஆயிரமாவது ஆண்டு முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன. உலகம் முழுதும், குறிப்பாக இத்தாலியிலும், ழுயரட நாட்டின் பகுதிகளிலும், ரோமானிய பாணியிலான சர்ச்சுக்கள் நிர்மாணிக்கப்பட்டன... ஒவ்வொரு கிறிஸ்துவ நாடும் அதி உன்னத அழகை அடைய பாடுபட்டன. விழித்தெழுந்து பழைய காலத்தை உதறியெறிய முயன்ற இந்த பூமியே சர்ச்சுகளின் வெள்ளை நிற மேலங்கியை ஆடையாக அணிந்து கொண்டதைப் போல தோன்றியது.'

ரோமானிய பாணியிலான கலை (இதைப்பற்றித்தான் சுயனரடயhரள பேசிக் கொண்டிருந்தார்) திடீரென்று 1003 ல் முகிழ்த்துவிடவில்லை; சுயனரடயhரள ஒரு சரித்திர ஆசிரியரைப் போலல்லாமல் அதிகம் ஒரு கவிஞரைப் போல எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், பல்வேறு நகர அரசுகளுக்கிடையே நிலவிய அதிகாரம் மற்றும் கௌரவம் தொடர்பான பகைமையைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். புதிய கட்டடக்கலை நுணுக்கங்களைப் பற்றியும், ஒரு புதிய புத்தெழுச்சியைப் பற்றியும் - பொருளாதார வளம் இல்லாமல் அத்தகைய சர்ச்சுக்களைக் கட்டியிருக்க முடியாது - பேசிக் கொண்டிருந்தார். பழைய சர்ச்சுக்களை விடவும் அளவில் பெரிய, வளரும் மக்கள் தொகைக்கு இடவசதி அளிக்கும் பெரிய, வளரம் மக்கள் தொகைக்கு இடவசதி அளிக்கும் விதத்தில் கட்டப்பட்ட சர்ச்சுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

ஷார்லமெயினின் சீர்திருத்தங்கள், ஜெர்மானியப் பேரரசின் ஸ்தாபிதம், பொலிவு பெற்ற நகரங்கள், கம்யூன்களின் தோற்றம் ஆகியவை காரணமாக பொருளாதாரச் சூழலும் மேம்பட்டது என்று தயங்காமல் சொல்லலாம். இதற்கு எதிர்மறையான ஒன்றையும் - அதாவது, ஏதோ ஒன்றால் அன்றாட வாழ்க்கை மற்றும் பணிபுரிய ஏதுவான சூழல்கள் ஆகியவை மேம்பட்டதால் அரசியல் சூழல் மலர்ந்தது, நகரங்கள் வளம் கொழிந்தன என்று சொல்வது சாத்தியம்தானே?

ஆயிரமாவது ஆண்டுக்கு முந்தைய நூற்றாண்டுகளில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாறும் பயிர் சுழற்சி முறை மெதுவாக மேற்கொள்ளப்பட ஆரம்பித்தது. இதன் மூலம் நிலத்தின் வளம் அதிகரித்தது. ஆனால் விவசாயத்திற்கு உபகரணங்களும், பணியாற்றும் விலங்குகளும் தேவைப்படுகின்றன; இந்தத்தளத்திலும் புதிய கண்டுபிடிப்புக்கள் தோன்றின. ஆயிரமாவது ஆண்டுக்கு சற்று முந்திதான் குதிரைகளுக்கு இரும்பு லாடங்களும் (அதுவரை குதிரைகளின் குளம்புகள் துணியால் கட்டப்பட்டிருந்தன), குதிரையைச் செலுத்துபவர்கள் பாதங்களை வைத்துக் கொள்ளும் தாங்கிகளும் பொருத்தப்பட்டன. இந்தத் தாங்கிகள் போர்வீரர்களுக்கே அதிகம் பயன்பட்டன. உழவர்களுக்கு அவற்றால் பயன் குறைவுதான். குதிரைகள், எருதுகள் மற்றும் பாரம் சுமக்கும்விலங்குகளுக்கென்று ஒரு புது வகையான கழுத்துப்பட்டை கண்டுபிடிக்கப்பட்டது; அது ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்பது நிரூபணமானது. பழைய வகை கழுத்துப்பட்டைகள் எல்லா பளுவையும் விலங்கின் கழுத்துத் தசைநார்கள் மீதே சுமத்தி அதன் மூச்சுக்குழாயை அபாயத்துக்குள்ளாக்கின. புதுக் கழுத்துப்பட்டை மார்புத்தசை நார்களை சேர்த்திணைப்பதால் விலங்கின் திறன் மூன்றில் இரண்டு மடங்கு அதிகரித்தது; சில பணிகளில் எருதுகளுக்குப் பதிலாகக் குதிரைகளை ஈடுபடுத்துவதும் இதனால் சாத்தியமாயிற்று (பழையவகை கழுத்துப்பட்டைகள் எருதுகளுக்கு அதிகம் பொருந்தின; ஆனால் அவை குதிரைகளைவிடவும் குறைவான வேகத்தில்தான் வேலை செய்தன). மேலும், கடந்த காலத்தில் கிடைமட்ட கோட்டில் நுகத்தடி பூட்டப்பட்ட குதிரைகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக செல்லும்படி இணைக்கப்பட முடிந்ததால் அவற்றின் இழுப்புவிசையும் கணிசமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் உழும்முறைகளும் மாறின. கலப்பைக்கு இரண்டு வெட்டு வாய்கள் இருந்தன. - ஒன்று நிலத்தை பிளப்பதற்கும், மற்றொன்று மண்ணைப் புரட்டிப் போடவும். இந்த `எந்திரம்' நார்டிக் மக்களுக்கு (ஸ்கோன்டிநேவியர்கள்) கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தெரிந்திருந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை அது ஐரோப்பா முழுக்க பரவவில்லை.

ஆனால் உண்மையில் நான் பேச விரும்புவது பீன்ஸ் பற்றித்தான்; பீன்ஸ் மட்டுமல்ல, பயறு மற்றும் அவரையைப் பற்றியும்தான். இப்பூமியின் எல்லா பழங்களிலும் தாவர புரோட்டீன் மிக அதிகம் உள்ளது என்பது குறைவாக இறைச்சி சாப்பிடும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்; அவரை அல்லது உடைத்த பயறு பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த உணவு வகை, திண்மையான, சுவையான ஒரு இறைச்சிக் கண்டத்துக்கு இணையான சத்து உடையது என்று ஊட்டச் சத்து வல்லுநர் வலியுறுத்திச் சொல்வார். நெடுங்காலத்தக்கு முந்திய அந்த இடைநிலைக் காலங்களில் ஏihகள் அவர்களே கோழிகளை வளர்த்தாலொழிய - அல்லது திருட்டுத்தனமாக விலங்குகளை வேட்டையாடினாலொழிய - இறைச்சி சாப்பிட முடியாது (காடுகளில் வேட்டையாடுதல் பிரபுக்களின் தனி உரிமையாக இருந்தது) நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த சத்துக்குறைவான உணவு, ஊட்டமில்லாத, மெலிந்த, சோகை படிந்த, குள்ளமான, வயல்களைப் பராமரிக்க இயலாத ஒரு மக்கள் திரளை உண்டாக்கியது. எனவே பத்தாம் நூற்றாண்டில் பயறுவகைகளின் சாகுபடி பரவத் தொடங்கியபோது ஐரோப்பாவின் மீது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உழைக்கும் மக்களால் அதிக புரோட்டீனை உண்ண முடிந்தது; அதன் விளைவாக அவர்கள் அதிக உடலுரம் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்து, அதிகக் குழந்தைகளைப் பெற்று ஒரு கண்டத்தின் மக்கள் தொகையை மறுபெருக்கம் செய்தார்கள்.

நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புக்கள் சிக்கலான எந்திரங்களைச் சார்ந்துள்ளன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் - அதாவது ஐரோப்பியர்களாகிய நாம், அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய மதகுருக்களின் வழித்தோன்றல்கள், மற்றும் ஸ்பானிய வெற்றியாளர்கள் - இன்னும் இங்கிருப்பதற்குக் காரணம் பீன்ஸ்தான். அவை இல்லாவிட்டால் ஐரோப்பிய மக்கள் தொகை சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே இரண்டு மடங்கு ஆகியிருக்காது. பல லட்சக்கணக்கானவர்களாக எண்ணிக்கையில் இன்று நாம் இருக்க மாட்டோம். நம்மில் சிலர், இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களையும் உள்ளிட்டு, வாழ்ந்திருக்க மாட்டோம். சில தத்துவ வாதிகள் மக்கள் தொகை பெருகாமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனறு சொல்கிறார்கள். ஆனால் எல்லாரும் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஐரோப்பியர் அல்லாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? மற்ற கண்டங்களின் பீன்ஸ் வரலாறு எனக்கு பரிச்சயமில்லை. சீனப்பட்டும், இந்திய வாசனைத் திரவியங்களும் இல்லாமலிருந்திருந்தால் ஐரோப்பாவின் வணிக வரலாறு வேறுமாதிரி ஆகியிருக்கும் என்பதைப் போல மற்ற கண்டங்களின் வரலாறும் ஐரோப்பிய பீன்ஸ் இல்லாமலிருந்திருந்தால் மாறியிருக்கும் என்பது நிச்சயம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பீன்ஸின் கதை நமக்கு முக்கியத்துவமுடையது என்று எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக, சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் நாம் தீவிர கவனம் கொள்ள வேண்டும் என்று அது சொல்கிறது. இரண்டாவதாக, மேற்கத்திய மக்கள் அரைக்காத அரிசியை உமியோடு சேர்த்து சாப்பிடப் பழகியிருந்தால் நாம் குறைவான அதே சமயம் நல்ல உணவை சாப்பிடுவோம் என்பது நமக்கு நீண்ட காலமாகவே தெரிந்திருக்கிறது.

ஆனால் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாரும் இந்த ஆயிரம் ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று தொலைக்காட்சியையோ அல்லது மைக்ரோ சில்லுவையோதான் சொல்வார்கள். ஆனால் இருண்ட காலத்திலிருந்தும் கூட சிலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.

தமிழில : ஆர். சிவகுமார்.



Share this Story:

Follow Webdunia tamil