சிற்றிதழ் : நிழல் (இதழ் 5)
அறிமுகம் : தி.சு. சதாசிவம், மா. அருண்மொழி, அமரந்தா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு இயங்கும் நவீன சிற்றிதழ் `நிழல்'
சினிமாவுக்கென்று ஒரு சிற்றிதழ் வருவது மிகவும் அரிதாகிவிட்ட சூழலில் `நிழல்' வெளிவருவது கலை சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயமே. இருமாத இதழாக வெளிவரும் இச்சிற்றிதழில் உலக சினிமா முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளிவரும் கலைப்படப் போக்குகள் பற்றியும் சிறப்பான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது.
இதன் விலை ரூ.20/- இந்த இதழிலிருந்து `கொமரம் பீம்' என்ற ஆந்திர கலை சினிமா பற்றிய சாந்தா தத் அவர்களின் கட்டுரையை வெப் வாசகர்களுக்குத் தருகிறோம்.
கொமரம் பீம் - சாந்தா தத்
ஒரு மலைவாழ்விரனின் உண்மைக்கதையை ஜனங்களுக்குச் சொல்லும் கலைப்படம் "கொமரம் பீம்".
ஹைதராபாத் நவாபை எதிர்த்துப் போராட்டம் நடத்திய கொமரம் பீம், 1901-ல் ஆந்திராவின் அதிலாபாத் ஜில்லாவில் இருக்கும் `போதன்காட்' எனும் குக்கிராமத்திதைச் சார்ந்தவன். அக்கால கட்டத்தில் தீவிரமாய் இருந்த நவாபு ஆட்சியின் அட்டூழியங்களை அடக்கி ஒடுக்குவதை சவாலாய் மேற்கொண்டு மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து உறுதியுடன் போராடியவன்.அதிலாபாத்தில் வாழும் கோண்டு, கோலம், தோடி, நாயக்போடு முதலான இனங்களை வழி நடத்தி. . . தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும், எவ்வித அக்கிரமங்களுக்கும் உயிரே போனாலும் பரவாயில்லை, அடிபணியக் கூடாது என்றும் ஓயாது எடுத்துச் சொல்லி பாமரர்களின் கண்களைத் திறந்த விடுதலைப் போராட்ட வீரன் கொமரம் பீம்.
சினிமாவுக்கென்று ஒரு சிற்றிதழ் வருவது மிகவும் அரிதாகிவிட்ட சூழலில் `நிழல்' வெளிவருவது கலை சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயமே. இருமாத இதழாக வெளிவரும் இச்சிற்றிதழில் உலக சினிமா முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளிவரும் கலைப்படப் போக்குகள் பற்றியும் சிறப்பான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது.
இதன் விலை ரூ.20/- இந்த இதழிலிருந்து `கொமரம் பீம்' என்ற ஆந்திர கலை சினிமா பற்றிய சாந்தா தத் அவர்களின் கட்டுரையை வெப் வாசகர்களுக்குத் தருகிறோம்.
கொமரம் பீம் - சாந்தா தத்ரு மலைவாழ்விரனின் உண்மைக்கதையை ஜனங்களுக்குச் சொல்லும் கலைப்படம் "கொமரம் பீம்".
ஹைதராபாத் நவாபை எதிர்த்துப் போராட்டம் நடத்திய கொமரம் பீம், 1901-ல் ஆந்திராவின் அதிலாபாத் ஜில்லாவில் இருக்கும் `போதன்காட்' எனும் குக்கிராமத்திதைச் சார்ந்தவன். அக்கால கட்டத்தில் தீவிரமாய் இருந்த நவாபு ஆட்சியின் அட்டூழியங்களை அடக்கி ஒடுக்குவதை சவாலாய் மேற்கொண்டு மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து உறுதியுடன் போராடியவன். அதிலாபாத்தில் வாழும் கோண்டு, கோலம், தோடி, நாயக்போடு முதலான இனங்களை வழி நடத்தி. . . தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும், எவ்வித அக்கிரமங்களுக்கும் உயிரே போனாலும் பரவாயில்லை, அடிபணியக் கூடாது என்றும் ஓயாது எடுத்துச் சொல்லி பாமரர்களின் கண்களைத் திறந்த விடுதலைப் போராட்ட வீரன் கொமரம் பீம்.
வெளியுலக நிழல்கூடப் படாமல் காட்டு மடியில் தவழ்ந்து விளையாடி ஆடிப்பாடி, ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடியபடி பிள்ளைப்பருவத்தைக் கழித்து. . . யௌவனத்தில் அடிவைத்த இந்த வனவாசி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அநியாயவரிகளைச் செலுத்த முடியாது பலவிதங்களிலும் சிரமப்பட்ட மக்களின் துயரம் கண்டு சீறிப் புறப்பட்டவன். மீசை கூட சரிவரத் தென்படாத பருவத்திலேயே `சித்திகி' எனும் நிஜாமை எதிர்த்துப் போராடினான். போலீசிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் முகமாய், காந்தா, பூனா போன்ற மராட்டியப் பிரதேசங்களில் சில வருடங்கள் திரிந்து இறுதியில் கோண்டுப் பகுதியைச் சேர்ந்து அம்மண்ணில் புரட்சி விதை விதைத்தான். அன்றைய சுதந்திர வீரன் அல்லூரி சீதாராமராஜுவின் அதிவீரச் செயல்களால் மேலும் ஊக்குவிக்கப்பட்டு மக்கள் விடுதலைக்காக கடுமையாக உழைத்தான். மாவீரன் பகத்சிங்கின் மரணம் அவனைக் காட்டுத் தீயாகக் கனன்றெழச் செய்தது. எல்லைமீறும் நிஜாம் அரசு மற்றும் அதிகாரிகளின் கொடுமைகளுக்கு முடிவுகட்டியாக வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதென மலைமுகடுகளில் பாதம் பதித்த வெய்யில் தேவதைபோல் போர்ப்பயணத்தைத் துவங்கினான். அப்போதைய தாசில்தார் அப்துல் சத்தார் பீமைச் சமாளிக்க முடியாது ஆயுதம் தாங்கிய தொண்ணூறு போலீசாருடன் அவன் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொள்ள. . . நிராயுதபாணியாக பீமின் நண்பர்கள் இறுதிவரை போராடி தம் இன்னுயிரைப் பலி கொடுத்தனர். போலீசிடமிருந்து பத்தடி தூரத்தில் இருந்த பீம் சாவுக்கு அஞ்சாது முன்வந்து சண்டையிட்டு. . . இறுதியில் உடல் குண்டுகளுக்குச் சல்லடையாகிச் சரிந்தது.
அன்றிரவு முழுநிலா கொதிக்கும் சூரியனாய் எரிந்தது. காட்டுநிலா கண்ணீர்க் கால்வாயாகக் கரைந்து பிரவகித்தது. கொமரம் பீம் கோண்டு இனத்தின் குலதெய்வமானான். படத்தின் இயக்குனர். . . அல்லனி ஸ்ரீதர் இப்படிப்பட்ட தனிச்சிறப்பு கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சினிமா எடுக்க விஷயஞானம் மட்டும் போதாது. . . கட்டுக்கதைகளுக்கும் கற்பனைக்கும் இடமற்ற உண்மைக்கதையைப் படமாக்கும்போது அதிமுக்கியமாய்த் தேவைப்படும் கலைஉள்ளம் கொண்ட அபாரமான படைப்புத்திறன் அதிமுக்கியம் என்பதை அற்புதமாய் நிரூபித்திருக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளர். . . `பார்' (ஞயயச) `அந்தயாளு யாத்ரா' (ஹவேயலயடர லயவசய) முதலான வங்காளப்படங்களுக்கு சிறப்பாக இசையமைத்த கௌதம் கோஸ். சில படங்களே ஆயினும் மண்வாசனை மிகு கலைப்படங்களில் இயல்பான இசைக்கென தனி அங்கீகாரம் பெற்றார். தெலுங்குக் கலைப்படங்களிலும் இவர் பணி உண்டு. தெலுங்கில் இவர் முதல் படம் `மாபூமி'. கதாநாயகன் . . . பூபால் `கொமரம் பீம்' பாத்திரத்தை மிக இயல்பாய் வெளிப்படுத்தியுள்ளார். முதல்படமான `மாபூமி'யிலேயே மக்கள் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டு பிரபல கலைப்பட இயக்குனர் பி. நரசிங்கராவின் `தாசி'யில் கதைநாயகன் முரட்டுத்துரை பாத்திரத்தின் மூலம் பரவலாய்ப் பேசப்பட்டார் பூபால். கொமரம் பீமில் இடம் பெற்ற மூன்று பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.
கதாநாயகி. . . தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமுள்ள மௌனிகா, பாலுமகேந்திரா பட்டறையில் உருவாக்கப்பட்ட இவரின் முதல் தெலுங்குப்படம் கொமரம் பீம். நடிப்பு என்றல்லாது ஆதிவாசி வெகுளிப் பெண்ணாகவே உருமாறி அதியதார்த்தமாய் தான் ஏற்ற பாத்திரத்திற்கு ஜீவன் கொடுத்துள்ளார்.
ஹைதராபாத்திலும் மற்ற சில ஆந்திரப் பகுதிகளிலும் ஓரிரு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் `பிரிவியூ' காட்சிகளாகத் திரையிடப்பட்ட `கொமரம் பீம்' இன்னும் தியேட்டர்களில் வெளிவராதது கலைப்படங்களுக்கே உரித்தான சாபமா. . .?