காற்று வெளியிடை படம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக சினிமாவில் காலடி எடுத்து வைத்த கார்த்தி இதில் அவரது நாயகனாகியிருக்கிறார். படம் குறித்த அனுபவங்களை கார்த்தி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
காற்று வெளியிடையில் என்ன மாதிரியான வேடம்...?
போர் விமானங்களை இயக்கும் விமானியாக காற்று வெளியிடையில் நடித்திருக்கிறேன்.
விமானப் படை அதிகாரிகளை சந்தித்து பேசினேன். விமானப் படையில் இருக்கும் என் நண்பர் மூலம் அதே துறையில் உள்ள சிலரை சந்திக்க முடிந்தது. மணி சார் மூலம் ஒரு விமானப்படை அதிகாரியின் தொடர்பு கிடைத்தது.
அதிதி ரொம்ப சின்சியர். தமிழே தெரியாதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் அவர் டாக்டராக வருகிறார். இதற்காக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனைக்கு சென்று கண்காணித்துள்ளார்.
காதல் படத்தில் நடிப்பதை வீட்டில் மனைவி எப்படி எடுத்துக் கொள்வார்...?
தனது கணவர் காதல் கதையில் நடிப்பது எந்த மனைவிக்கும் பிடிக்காது. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ் செய்வதை அவர்களால் பார்க்க முடியாது. ஆக்ஷன் படங்களில் நடித்தால் அவர்களுக்கு பிடிக்கும்.
முதலில் உதவி இயக்குனர்... இப்போது நடிகர்... என்ன வித்தியாசம்?
மணிரத்னம் சாரிடம் உதவியாளராக இருந்துவிட்டு அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். முதலில் தயக்கமாக இருந்தது. அதன் பிறகு சவுகரியமாகிவிட்டது. உதவியாளர்களிடம் நடந்து கொள்வது போன்று இல்லாமல் மணி சார் நடிகர்களிடம் ரொம்ப ஸ்வீட்டாக இருப்பார்.