Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமர்சனங்கள் வித்தியாசமான படம் செய்ய தைரியம் தந்திருக்கு - விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் பேட்டி

Advertiesment
விஷ்ணு விஷால்
விஷ்ணு தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றியுள்ளார். பெயரை மாற்றிய பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அவரது பிறந்தநாளான நேற்று நடந்தது. விஷ்ணு விஷாலின் பேச்சில் பணிவும் துணிவும் சரிவிகிதத்தில் எதிரொலிக்கிறது.
பெயரை மாத்திட்டீங்களே?
 
என்னுடைய உண்மையான பெயர் விஷால். நான் இன்டஸ்ட்ரிக்கு வரும் போது விஷால், உங்களுக்கே தெரியும் ஆல்ரெடி பெரிய ஆக்டர். சோ பெயரை மாத்தலாம்னு விஷ்ணுன்னு மாத்தினேன். அப்புறம் திடீர்னு நடுவுல தோணிச்சு, பழைய பெயர் இருந்தா நல்லாயிருக்கும்னு. அதுக்குள்ள விஷாலும் நல்ல ப்ரெண்டாயிட்டாரு. சரி, தப்பா எடுத்துக்க மாட்டார்னு விஷ்ணு விஷால்னு மாத்திட்டேன்.
 
சில நடிகர்களுக்குதான் முதல் படமே அடையாளமாக மாறும். உங்களுக்கு அப்படி நடந்தது இல்லையா? 
 
சுசீந்திரன் சார் முதல் படத்துலயே மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். அது இவ்வளவு பெரிய வாய்ப்பா மாறும்னு நாங்க யாருமே நினைச்சுப் பார்க்கலை. 
 
அவருக்குப் பிறகு...?
 
சீனு ராமசாமி சார். எனக்குத் தெரிஞ்சு நீர்ப்பறவை படத்துக்குப் பிறகுதான் எனக்கே நடிப்பு மேல ஒரு இன்ட்ரஸ்ட் வந்தது. இன்னும் நல்லா நடிக்கணும், இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு நடிப்புல. இப்பதான் நாம கத்துக்க ஆரம்பிச்சிருக்கோம் அப்படீன்னு ஒரு நம்பிக்கையை அவர் கொடுத்தார். அடுத்து இரண்டாவதா இடம் பொருள் ஏவல் அவர் டைரக்ஷன்ல பண்ணியிருக்கேன். அவர் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டண்ட் பார்ட் ப்ளே பண்ணியிருக்கார் இதுவரையான என்னோட கரியர்ல.

அதிகம் அறிமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறீர்களே...?
 
சுசீந்திரன் சாருடன் பர்ஸ்ட் படம் பண்ணும்போது அவரும் புதுசு. அடுத்து முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம். இன்று நேற்று நாளை டைரக்டர் ரவி. மூணுமே எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்த படங்கள். நான் அவங்களை நம்பினேன். அந்த நம்பிக்கையை சூப்பராக எனக்கு திருப்பிக் கொடுத்தாங்க. 
webdunia
உங்கள் நண்பர் விஷால் பற்றி...?
 
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் அடுத்தவங்க படத்தைப் பார்த்துட்டு மெசேஜ்தான் அனுப்புவோம். படம் நல்லாயிருக்கு. இது நல்லாயிருக்கு. அது பண்ணியிருக்கலாம் அப்படீன்னு. அதையெல்லாம் மீறி, ஒரு படத்தைப் பார்த்துட்டு, நான் இந்தப் படத்தை உனக்காக ரிலீஸ் பண்றேன்னு விஷால் சொன்னார்.

அதை கேட்கும் போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஹீரோவோட படத்தை இன்னொரு ஹீரோ எடுத்து ரிலீஸ் பண்றது சின்ன விஷயம் கிடையாது. விஷால் எனக்கு ஒரு மூத்த சகோதரனைப் போல் இன்னைக்கு வரைக்கும் இருக்கிறார். எதாவது ஒரு பிரச்சனைன்னா அவர்கிட்ட போய் நிற்கலாம்கிற அளவுக்கு ப்ரெண்ட் அவரு. 
 
இன்னொரு ப்ரெண்ட் ஆர்யா?
 
விஷாலை மாதிரிதான் ஆர்யா. படத்தை புரொடியூஸ் பண்ணி நல்லபடியா ரீச் பண்ணி கொடுத்தாரு. 
 
நடிக்க வந்த இத்தனை வருடங்களில் என்ன ஃபீல் பண்றீங்க?
 
என்னை மாதிரி புதுசா வர்றவங்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும். எல்லோரும் பண்றதை செய்றதா இல்லை வித்தியாசமா செய்யலாமான்னு. எனக்கு கிடைக்கிற விமர்சனங்கள் வித்தியாசமாக பண்ணலாம்ங்கிற தைரியத்தை தந்திருக்கு.

Share this Story:

Follow Webdunia tamil