விஷால் மீது கண்ணாடி பாட்டில்களை தூக்கி எறியும் ஸ்டண்ட் கலைஞர்கள்: வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:33 IST)
விஷால் மீது கண்ணாடி பாட்டில்களை தூக்கி எறியும் ஸ்டண்ட் கலைஞர்கள்: வைரல் வீடியோ
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஆனால் அண்டை மாநிலமான ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கிய நிலையில் விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷால் 31 படத்திற்காக படமாக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதில் விஷாலை சுற்றி நின்று கொண்டிருக்கும் வில்லனின் அடியாட்கள் அவர்மீது கண்ணாடி பாட்டிலை எரியும் காட்சிகள் உள்ளன 
 
இந்த காட்சி படமாக்கப்பட்ட விதமும் விஷாலின் நடிப்பும் ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். துபா சரவணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்பவர் நடித்து வருகிறார், இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய சினிமா வரலாற்றில் புதிய உச்சம்!. 3 ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர்!..

ஹாரிஸ், அனிருத் இசையில் ஹிட் பாடல்! இன்று வாய் பேச முடியாத நிலையில் பிரபல பாடகர்..

தமிழ் புத்தாண்டு கைகொடுத்ததா?...பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே 5 நாள் வசூல்

பேச்சுவார்த்தை ஓவர்!.. விரைவில் வெளியாகும் ஜனநாயகன்!.. விஜய் ஃபேன்ஸ் ஹேப்பி!..

காட்டுப்பன்றிகள் அழித்த விவசாயியின் பயிர்... விஜயின் ஜன நாயகன் லீக் விவகாரத்தில் கொந்தளித்த தம்பி ராமையா!

அடுத்த கட்டுரையில்
Show comments