Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படம் சூப்பரா இருக்குங்கண்ணா என்றார் விஜய் - அட்லி பேட்டி

படம் சூப்பரா இருக்குங்கண்ணா என்றார் விஜய் - அட்லி பேட்டி

Advertiesment
தெறி
தெறி இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு இயக்குனர் அட்லி உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


 

 
அப்போது அட்லி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
தெறி சத்ரியன் படத்தின் தழுவல் என்கிறார்களே...?
 
தெறியை சத்ரியனோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால், தெறி முழுக்க முழுக்க வேறு மாதிரியான படம்.
 
படத்தில் முக்கியமாக எதை சொல்லியிருக்கிறீர்கள்?
 
பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது என உண்மை நிகழ்வுகளை படமாக்கியிருக்கிறோம்.
 
ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் உங்கள் பாணி அவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கிறதே...?
 
நான் ஷங்கர் சாரிடம் உதவியாளராக பணிபுரிந்திருந்தாலும் ஷங்கர், மணிரத்னம், பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, பாக்யராஜ் ஆகியோரைத்தான் குருவாக நினைக்கிறேன்.

உங்கள் முதல் படம் ராஜா ராணியின் வெற்றிக்கு சந்தானமும் ஒரு காரணம். இதில் அவர் இல்லையே...?
 
சந்தானம் இந்த படத்தில் இல்லை என்ற குறையை ராதிகா சரத்குமார், சமந்தா, நைனிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தீர்த்திருக்கிறார்கள்.
 
விஜய்...? அவரது கதாபாத்திரம்...?
 
இந்த படத்தின் சண்டைக் காட்சிக்காக விஜய் ரொம்பவும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். நம் வீட்டில் ஒரு போலீஸ் இருந்தால் எந்தமாதிரியான உணர்வு இருக்குமோ, அது இந்த படத்தை பார்க்கும்போதும் இருக்கும். 

webdunia

 

 
படத்தில் எமோஷன் உண்டா?
 
பொதுவா விஜய் படங்கள் என்றால் இடைவேளையின்போது ஒரு மாஸ் இருக்கும். ஆனால், இந்த படத்தில் ஒரு எமோஷனல் இருக்கும். இடைவேளைக்கு முன்பு மொட்டை ராஜேந்திரன் பேசும் வசனங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு எமோஷனை உருவாக்கும் என சொல்லலாம்.
 
மகேந்திரன் படத்துக்கு வசனம் எழுதுகிறீர்களாமே?
 
இந்த படத்தின் வசனங்களை கேட்டுவிட்டு மகேந்திரன் சார் அவருடைய அடுத்த படத்துக்கு என்னை வசனம் எழுத அழைப்பு விடுத்தார். அதை கேட்டதுமே அன்று முழுவதும் எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை.
 
படத்தைப் பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?
 
படத்தை முழுவதும் பார்த்துவிட்டு சூப்பரா இருக்குங்கண்ணா என்று சொன்னார். 
 
தெறியின் இரண்டாம் பாகம் வருமா?
 
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று அனைவரும் கேட்கிறார்கள். அது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.
 
இந்த படத்திற்கு ரசிகர்கள் எந்தமாதிரி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று முடிவெடுக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil