சூர்யாவை பிடிக்கும் - சானியாதாராவின் ஓபன் பேட்டி
சூர்யாவை பிடிக்கும் - சானியாதாராவின் ஓபன் பேட்டி
Publish Date: Sat, 30 Jan 2016 (12:08 IST)
Updated Date: Sat, 30 Jan 2016 (12:20 IST)
நயன்தாராவின் பெயரில் பாதி சானியதாராவில் இருக்கிறது. ஆனால், நயன்தாராவின் பிரபல்யம் மட்டும் பாதிகூட சானியாதாராவிடம் எட்டவில்லை. கையில் சில படங்கள் இருந்தாலும் நல்லதொரு திருப்புமுனை படத்துக்காக காத்திருக்கிறார். அவருடனான பேட்டியிலிருந்து.
உங்களைப் பற்றி சொல்லுங்க, நீங்க நடித்த முதல் படம்...?
சென்ற வருடம் வெளியான ஜிகினா படத்தில் நான்தான் நாயகி. வாராயோ வெண்ணிலாவே படத்தில் குட்டி பதாபாத்திரத்தில் உங்களை கவர்ந்தவரும் நானே.
சுசீந்திரனின் ஜீவாவில் இன்னொரு நாயகியாகவும் நடித்திருந்தேன்.
சானியாதாராதான் உங்க இயற்பெயரா?
இல்லை, சானியா ஷேக். பிடித்த நடிகை நயன்தாரா என்பதால், எண் கணிதப்படி சானியாதாரா என்ற பெயர் அமைந்துவிட்டது.
சினிமாவுக்கு வந்தது எப்படி?
சின்ன வயதிலேயே சினிமா மீதுதான் ஆர்வம். அந்த ஆர்வத்தில் நடனம் கற்றேன். சில விளம்பரப் படங்களில் நடித்தேன். சினிமா வாய்ப்பு கிடைக்கவே இங்கே வந்துவிட்டேன்.
உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை...?
நடிகர்களில் சூர்யாவும், நடிகைகளில் ஜோதிகாவும் பிடிக்கும். இயக்குனர்களில் ராஜமௌலி, மணிரத்னம், ஷங்கர் மூவரும் என்னுடைய பேவரைட்.
எந்த மாதிரியான படங்கள் விருப்பம்?
பேய் படங்கள், திகிலூட்டும் த்ரில் படங்கள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். சந்திரமுகி ஜோதிகா என்னை கலங்கடித்துவிட்டார்.
நடிகையாக இருக்கிறீர்கள்... சமையல்கட்டு பக்கம் போவீர்களா?
சமைக்க எனக்குப் பிடிக்கும். சிக்கன் அயிட்டங்களை அசத்தலாக சமைப்பேன். சமைப்பதைவிட சாப்பிட ரொம்பப் பிடிக்கும்.
ஆந்திரா. சுந்தர தெலுங்கு என்றாலும், தமிழ் நன்றாக பேசுவேன்.
அழகு, திறமை கூடவே நயன்தாரா பெயரில் பாதி இருந்தும் இன்னும் சரியான படம் அமையவில்லையே?
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும். அது வந்துவிட்டால் யார் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்புக்கு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்.