Publish Date: Mon, 02 Nov 2015 (12:09 IST)
Updated Date: Mon, 02 Nov 2015 (12:16 IST)
இயக்குனர் முரளி கிருஷ்ணா மிரண்டவன் படத்தை அடுத்து, நேர்முகம் என்னும் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் இடம்பெறும் லிப் லாக் காட்சியொன்றை எடுக்க முயற்சித்து லிப்பில் மண் ஒட்டிய கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார், முரளி கிருஷ்ணா.
உங்க படம் எந்த மாதிரியானது?
மனிதர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை சொல்லும் படம் தான் இந்த நேர்முகம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காக எங்கு செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்ஷன், கிளாமர் கலந்து செம கமர்சியல் மசாலாவாக உருவாக்கி வருகிறோம்.
படத்தில் வருகிறவர்களுக்கு அப்படி என்ன இக்கட்டு ஏற்படுகிறது?
ஏழு ஜோடிகள் காட்டுக்குள் மாட்டிக் கொண்டு படுகிற அவஸ்தைகள்தான் படம். இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்கும்.
நாயகன் நாயகி பற்றி...?
காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் முக்கிய ஜோடிகளாக ரஃபியும் மீனாட்சியும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஒரு பெரிய போராட்டமே நடத்துகின்றனர்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
இதில் எங்கு முத்தக் காட்சி வருகிறது?
வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென முடிவெடுத்தோம்.
மீனாட்சி ஒத்துக் கொண்டாரா?
கதை சொன்னபோது முத்தக் காட்சி பற்றி கூறாததால் தயங்கித்தான் அவரிடம் சொன்னோம். அவர் ஒத்துக் கொண்டார். ஆனால், நாங்க எதிர்பாராதது நடந்தது.
என்ன...?
ஹீரோ ரஃபியிடம் இதை சொன்னதும் பதறிப் போனார். "சார், நான் கல்யாணமானவன், வீட்டில் டைவர்ஸ் வரைக்கும் போயிடுவாங்க. படம் நடிக்கணும் என்பது என் கனவு... அதனாலத்தான் தயாரிச்சி நடிக்க வந்திருக்கேன். பத்து மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க குதிக்கேன். தயவுசெய்து இது மட்டும் வேணாமே" என கேட்டுக்கொள்ள வேற வழியில்லாமல் லிப் லாக் காட்சியை கைவிட வேண்டியதாயிடுச்சி.
படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?
ரஃபி, மீனாட்சி, மீரா நந்தன் ஆகியோருடன் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.