இரண்டு ஹீரோயின்களுடன் நடித்தது இன்ஸ்பைரிங்கா இருந்திச்சி - நாசர் மகன் லுத்ஃபுதீன் பேட்டி
இரண்டு ஹீரோயின்களுடன் நடித்தது இன்ஸ்பைரிங்கா இருந்திச்சி - நாசர் மகன் லுத்ஃபுதீன் பேட்டி
Publish Date: Wed, 20 Jul 2016 (13:03 IST)
Updated Date: Wed, 20 Jul 2016 (13:13 IST)
சைவம் படத்தில் அறிமுகமான நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் நாயகனாக அறிமுகமாகும் படம், பறந்து செல்ல வா. முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தனபால் இயக்கியுள்ளார். படத்தின் பிரஸ்மீட்டில் லுத்ஃபுதீன் அளித்த பேட்டி...
பறந்து செல்ல வா படத்தை பற்றி சொல்லுங்க?
நான் முதல் முதலா நடிச்சது சைவம் படத்தில். அதுல ஒரு சின்ன வேடம் பண்ணியிருப்பேன். மெயின் கேரக்டர்ல நடிச்சிருக்கிற முதல் படம் பறந்து செல்ல வா.
உடன் நடித்திருப்பவர்கள்...?
இதுல என்னுடன் நடிச்சிருக்கிறவங்க எல்லோருமே திறமைசாலிகள், அனுபவம் வாய்ந்தவங்க. ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன்னு எல்லோருமே பெரிய ஆர்டிஸ்ட்.
இரண்டு நாயகிகள் இருக்கிறார்களாமே?
ஆமா. ஐஸ்வர்யா ராஜேஷ், அப்புறம் நரேல் கெங். இவங்க சிங்கப்பூர் ஆர்டிஸ்ட். இவங்ககூட வொர்க் பண்ணுனது ரொம்பவும் இன்ஸ்பைரிங்கா இருந்திச்சி.
சிங்கப்பூர் நடிகையோடு லிப் கிஸ் இருக்கே, வீட்ல அம்மா என்ன சொன்னாங்க?
அம்மா எதுவும் சொல்லலை. ஆனா, எதாவது சொல்வாங்களோன்னு பயமா இருந்திச்சி.
சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜின்னு காமெடி டீம் வெயிட்டா இருக்கே?
ஆமா. இவங்ககூட வொர்க் பண்ணுனது ரொம்ப த்ரில்லிங்கா இருந்திச்சி. எந்த ஒரு சீன்லயும் டல்லா பீல் பண்ண மாட்டோம். ஏதாவது ஒரு எக்ஸைட்மெண்ட் அதுல வச்சுகிட்டே இருப்பாங்க. சீனை மட்டுமில்லை ஷுட்டிங் ஸ்பாட்டையே இன்ட்ரஸ்டிங்கா வச்சிருந்தாங்க.
ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்தப் படத்துக்கு இசை. அவரோட மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துக்கு அவர் மியூசிக்குன்னு சொன்னப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சி. லேட்நைட் ஷுட்டிங் நடந்தப்போ அவரோட பாடல்கள்தான் எங்களை ப்ரெஷ்ஷா வச்சிருந்தது.
சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தியது எப்படி இருந்தது?
ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். ஏன்னா இங்க ஷுட் பண்றதுக்கும் சிங்கப்பூர்ல ஷுட் பண்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்திச்சி. அந்த மாதிரி ஒரு சூழல்ல படப்பிடிப்பு நடத்தினது வித்தியாசமாகவும் இருந்திச்சி எனக்கு சேலஞ்சிங்காகவும் இருந்திச்சி.