Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் உடையில்கூட நடித்துவிடலாம், ஆனால் ஜாக்கெட் போடாமல்... - சோனாக்ஷி சின்கா பேட்டி

நீச்சல் உடையில்கூட நடித்துவிடலாம், ஆனால் ஜாக்கெட் போடாமல்... - சோனாக்ஷி சின்கா பேட்டி
, செவ்வாய், 9 டிசம்பர் 2014 (09:46 IST)
லிங்கா படத்தில் நடித்ததை ஒரு வாய்ப்பு என்று சோனாக்ஷி சின்கா நினைக்கவில்லை. வரமாகவே கருதுகிறார். இந்தியாவின் மோஸ்ட் வான்டட் நடிகையின் லிங்கா அனுபவம் எப்படி...? அவரே சொல்கிறார்.
சினிமாவுக்கு வருவீர்கள் என்று நினைத்ததுண்டா?
 
சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. கல்லூரியில் படிக்கையில் நான் கவர்ச்சியாக இருக்க மாட்டேன். செம குண்டு. லக்மே விளம்பரத்தில் 2008 -இல் குண்டு பெண்ணாகதான் நடித்திருந்தேன்.
 
அப்புறம் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?
 
தபாங் படத்தில் நடிக்க சல்மான் கான் அழைத்தார். குண்டு பெண்ணான என்னை ஏன் கூப்பிடுகிறார் என்றே புரியவில்லை. படத்தில் ஒப்பந்தமான பிறகு உடல் எடையை குறைக்கச் சொன்னார். நடிக்க கமிட்டாகிவிட்டதால் வீட்டிலேயே ஜிம் வைத்து இரவு பகலாக உடற்பயிற்சி செய்து 40 நாள்களில் முப்பது கிலோ எடையை குறைத்தேன். அந்த சினிமா வெளியான பிறகு குண்டு என்று கேலி பேசியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
 
ரஜினியுடன் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது?
 
முதல் படம் வெற்றி பெற்றதும், அழகைவிட தன்னம்பிக்கைதான் முக்கியம் என்பது புரிந்தது. என்னுடைய அந்த தன்னம்பிக்கைதான் தென்இந்தியாவின் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததுக்கு காரணம் என்று நினைக்கிறேன். 
 
உங்கள் தந்தை சத்ருகன் சின்காவும், ரஜினியும் நண்பர்கள். லிங்கா வாய்ப்பு கிடைத்ததும் உங்கள் தந்தையின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?
 
மிகுந்த சந்தோஷமடைந்தார். இருவரும் நல்ல நண்பர்கள். இந்திப் படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் இணைந்து நடித்த அஸ்லி - நக்லி வெளிவந்த ஒரு வருடத்தில் நான் பிறந்தேன்.
 
ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
முதலில் வெட்கமாக இருந்தது. ரஜினிதான் எனக்கு தைரியமூட்டி நடிக்க வைத்தார். என்னுடைய நண்பரின் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ ஏன் வெட்கப்படுகிறாய் என்று உற்சாகப்படுத்தினார்.
 
படத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடித்திருக்கிறீர்களே...?
 
லிங்கா படத்தில் 1940 -ஆம் ஆண்டு நடக்கும் கதையின் நாயகி என்பதால் ஜாக்கெட் அணியாமல் நடித்தேன். நீச்சல் உடையில்கூட நடித்துவிடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil