Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தா நடிப்பதை நிறுத்த மாட்டார் - வருங்கால கணவர் நாக சைதன்யா பேட்டி

சமந்தா நடிப்பதை நிறுத்த மாட்டார் - வருங்கால கணவர் நாக சைதன்யா பேட்டி

Advertiesment
சமந்தா
சமந்தாவுடனான காதல், கல்யாணம் மற்றும் திருமணத்துக்குப் பின் சமந்தா நடிப்பாரா உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் முதல்முதலாக பதிலளித்துள்ளார் நாக சைதன்யா. அவரது பேட்டியிலிருந்து....
 

 

 
சமந்தா திருமணத்துக்காக மதம் மாறுவது உண்மையா?
 
சமந்தா மதம் மாறவில்லை. அப்பா ஒரு பூஜைக்கு அழைத்தார். நானும், சமந்தாவும் போனோம். அவ்வளவுதான். அந்த புகைப்படத்தில் சமந்தா பொட்டுடன் இருப்பதை வைத்து இப்படியொரு வதந்தியை கிளப்பியுள்ளனர்.
 
இனி மேல் அவர் மதம் மாறுவாரா?
 
மதம் மாறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. சாதி, மதத்தை வைத்து ஒருவரை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்னுடைய விருப்பம்.
 
சமந்தாவிடம் உங்களுக்குப் பிடித்தது?
 
வெளிப்படையானவர், நேர்மையானவர். மனதில் இருப்பதை அப்படியோ சொல்லிவிடுவார். அந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
 
கருத்து வேறுபாடு வந்ததுண்டா...?
 
ஒரு சினிமாவை ஒப்புக் கொள்ளும் முன்பு பரஸ்பரம் சில கருத்துகள் சொல்லிக் கொள்வோம். சினிமா சார்ந்து பரஸ்பரம் விமர்சிப்பதும் உண்டு. அதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. 
 
திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பாரா?
 
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பார். அவர் நடிப்பதை நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. 
 
ஏன்...?
 
சினிமாவில் நான் இந்த இடத்தில் இருக்க குடும்பப் பின்னணிதான் காரணம். ஆனால், சமந்தா போன்றவர்கள் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைகிறார்கள். அது வலி நிறைந்த பயணம். மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகே இந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு வந்த இடத்தை திருமணத்துக்குப் பிறகு இழந்துவிட வேண்டும் என்பது சரியல்ல. அது பெரும் தவறு. எனவே, திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன். 
 
எப்போது திருமணம்?
 
அடுத்த வருடம் நடத்த திட்டமிட்டிருக்கிறேnம். தேதி முடிவாகவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியா விரைந்த எஸ் 3 படக்குழு