Publish Date: Mon, 21 Sep 2015 (21:45 IST)
Updated Date: Mon, 21 Sep 2015 (21:55 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த் நடித்திருக்கும் சாஹசம் படம் வெளிவரவிருக்கிறது. தமன் இசையமைத்திருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
பிரஷாந்தின் பிளஸ்பாயிண்டே திரையுலகில் தான் இல்லாத காலங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதேயில்லை. இங்கேதானே இருக்கேன் என்றபடி அதனை கடந்து போவதுதான் அவரது ஸ்டைல், குணம். இப்போதும் அப்படித்தான்.
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
எல்லாரும் இதையேதான் சொல்றாங்க. நிறைய கேப் எடுத்துகிட்டீங்களேன்னு. அப்படியெல்லாம் இல்லை. நான் செம்பருத்தி பண்ணும்போது அது ஒரு வருஷம் எடுத்துகிச்சி. ஜீன்சுக்கு இரண்டு வருஷம். ஒரு படம் பண்ணும் போது ஒரு படம்தான், இரண்டு மூணு படம் பண்ண மாட்டேன். அந்தப் படம் முடியுறவரை டைம் எடுத்துப்பேன். சமீபத்துல பொன்னர் சங்கர், மம்பட்டியான் நடிச்சேன். நான் எங்கேயும் போகலை, இங்கதான் இருக்கேன். படம் பண்றதுக்கு கொஞ்சம் டைமாயிடுச்சி அவ்வளவுதான்.
உங்க கடைசி இரண்டு படங்களிலிருந்து சாஹசம் எப்படி வித்தியாசப்படுகிறது?
பொன்னர் சங்கர் ஒரு பீரியட் படம். மம்பட்டியான் காட்டுல நடக்கிற கதை. இந்தப் படங்கள் பண்ணும்போது என்கிட்ட பேசினவங்க, இனி நீங்க ஒரு மாடர்ன் படம் பண்ணணும்னு சொன்னாங்க. சரி, ஒரு கமர்ஷியல் படம் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணணும்னு பண்ணுன படம்தான் சாஹசம்.
படத்தோட இசை, இசையமைப்பாளர் பற்றி சொல்லுங்க...?
இந்தப் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தமன் சாரை சந்திச்சேன். இந்தப் படத்துல எனக்கு சூப்பர் டூப்பர் சாங்ஸ் கொடுத்திருக்கார். உங்க படம்னா சாங்ஸ் நல்லாயிருக்கும், டிபரண்டா இருக்கும். அதுக்கு ஈடுகொடுக்கிற மாதிரி சாங்ஸ் போடுறேன்னு சொல்லி பண்ணி கொடுத்தார்.
இதில் நடித்த நடிகர்கள் பற்றி...?
இப்படியொரு படம் பண்றோம், நீங்க நடிக்கணும்னு ஒரு போன் கால் பண்ணி சொன்னதுக்கே, எல்லோருமே நடிக்கிறேன்னு உடனே ரெஸ்பான்ஸ் பண்ணுனாங்க. அதேமாதிரி நடிச்சும் கொடுத்தாங்க. தம்பி ராமையா சாராகட்டும், நாசர் சாராகட்டும் நிறைய ஸ்டார்ஸ். எல்லாரும் ஒரு பேமிலி மாதிரிதான் இருந்தோம்.
படம் எப்படி வந்திருக்கு? எப்போது ரிலீஸ்...?
உங்களை மாதிரியே நானும் இந்தப் படத்துக்காக எக்ஸைட்டா வெயிட் பண்ணிட்டிருக்கேன். படம் ரொம்ப சிறப்பா வந்திருக்கு. இயக்குனர் முதற்கொண்டு எல்லாரும் கடுமையா உழைச்சிருக்காங்க. எக்ஸ்ட்ராடினரி மூவியா சாஹசம் இருக்கும்.