Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில கதைகளை ஷார்ட்டா சொன்னா நல்லாயிருக்கும் - ராகவா லாரன்ஸ்

Advertiesment
ராகவா லாரன்ஸ்
முனி 3 - கங்கா படம் முடியும் முன்பே, ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் ஓய்வு எடுத்த போது கிடைத்த ஐடியாவாம் இந்த, ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா. அது குறித்த அவரது விரிவான பேச்சும், பேட்டியும்.
கங்கா படத்தை முடித்துவிட்டீர்களா?
 
கங்கா படம் முடிஞ்சிடுச்சி. கிளைமாக்ஸ் மட்டும்தான் பேலன்ஸ் இருக்கு. கங்கா படம் லேட்டானதுக்கு காரணம், கொஞ்சம் உடம்புக்கு முடியாம போயிடுச்சி. ஸ்பைனல் கார்டில் அடிபட்டதால அஞ்சு மாசம் டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி, தாமதமாயிடுச்சி.
 

படத்தை எப்போ வெளியிடுறீங்க?
 
கிளைமாக்சும், ஒரேயொரு சாங்கும்தான் பேலன்ஸ் இருக்கு. அது இந்த மாசத்தோடு முடிஞ்சிடும். டிசம்பர் 25 கிறிஸ்மஸுக்கு ரிலீஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். 
webdunia
படம் எப்படி வந்திருக்கு?
 
காஞ்சனா எவ்வளவு பயமுறுத்திச்சோ, எவ்வளவு காமெடியா இருந்திச்சோ, காமெடியோட சரத்குமாரை வச்சு ஒரு மெசேஜ் சொன்னமோ அதைவிட பயம், அதைவிட காமெடி, மெசேஜ் எல்லாம் கங்காவுல இருக்கு. ரொம்ப நல்லா வந்திருக்கு.
 

அடுத்து...?
 
ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்கும் போது சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கும் போதுதான் எதாவது திங்க் பண்ண தோணும். கங்காவுக்கு அப்புறம் நாம என்ன படம் பண்ணலாம்ங்கிற போது சின்ன ஐடியா ஒண்ணு தோணுனது. அது ரொம்ப நாளா... ஆறு மாசமா மனசுக்குள்ள இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது, இது பண்ணுனா வொர்க் அவுட் ஆகுமான்னு.
 
அப்படி என்ன ஐடியா...? 
 
ரொம்ப பெரிய விஷயமெல்லாம் இல்லை. நான் இப்போ அறிவிக்கிற படத்தோட பேரு, ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா. பெயர் கொஞ்சம் நீளமா இருக்கும். ஒரு டிக்கெட்டுலயே ரெண்டு சினிமா. ஒரு படம் கிழவன், இன்னொரு படத்தோட பேரு கருப்பு துரை. 
webdunia
யார் நடிக்கிறாங்க?
 
ஒரு படத்துல லட்சுமி ராய் ஹீரோயின், இன்னொரு படத்துக்கு ஆண்ட்ரியாவை ட்ரை பண்ணிட்டு இருக்கோம். இன்டர்வெல்லுக்கு முன்னாடி ஒரு படம் முடிஞ்சிடும். இன்டர்வெல்லுக்கு அப்புறம் இன்னொரு படம் ஸ்டார்ட் ஆகும். 
 
ஒரு டிக்கெட்டில் இரண்டு படம்னா, அதுக்கேத்த கதை வேண்டுமே?
 
கதைகூட நல்லா அமைஞ்சிருக்கு. சில கதைகள் பார்த்திங்கன்னா ஷார்ட்டா சொன்னா நல்லாயிருக்கும். காஞ்சனா படத்துலகூட அந்த அரவாணி கதாபாத்திரத்தை படம் ஃபுல்லா வர்ற மாதிரி வச்சா பார்ப்பாங்களா இல்லையான்னு சந்தேகம். தவிர இப்போ இருக்கிற போட்டியில் ஏதாவது புதுசா பண்ணியாகணும். அதுக்காக ட்ரை பண்ணி புது முயற்சி ஒண்ணு எடுத்திருக்கேன்.
 

ஹீரோ, ஹீரோயின்...? 
 
கருப்பு துரையில லட்சுமி ராய் பண்றாங்க. கிழவன்ல ஆண்ட்ரியாவை ட்ரை பண்ணிட்டு இருக்கோம். இரண்டிலும் நான்தான் ஹீரோ. 
 
கங்கா படத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள் பணிபுரிவதா கேள்விப்பட்டோம்...?
 
கங்கா படத்துல மூணு மியூஸிக் டைரக்டர்ஸ். தமன் இரண்டு பாடல்களுக்கு இசையமைச்சிருக்கார். இன்னொருவர் லியோங்கிற அறிமுகம். இரண்டு பாடல்கள் பண்ணியிருக்கார். கிழவன் படத்துக்கும் அவர்தான் மியூஸிக். கருப்பு துரை படத்துக்கு இன்னொரு புதுமுக இசையமைப்பாளரை பயன்படுத்தலாம்னு இருக்கேன். 
 
இரண்டு படங்களும் என்ன மாதிரியானவை?
 
கருப்பு துரையில் காமெடி நிறைய இருக்கும். கோவை சரளா அதுல இருக்காங்க. கிழவன் படத்துல நல்லதொரு மெசேஜ் இருக்கும். 
 
தயாரிப்பு...?
 
என்னோட ராகவேந்திரா புரொடக்ஷன்லயே தயாரிக்கலாம்னு இருக்கேன். இந்தப் படத்தை நவம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல்ல ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன். 
  

Share this Story:

Follow Webdunia tamil