Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது அருந்திவிட்டு பாடுற காட்சி சாஹசத்தில் கிடையாது - தியாகராஜன் பேட்டி

Advertiesment
சாஹசம்
இன்று மலேசியாவில் சாஹசம் படத்தின் ஒரு பாடலை வெளியிடுகின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியாகிற பிரசாந்த் படம் என்பதால் பணத்தை தண்ணீராக இறைத்திருக்கிறார், பிரசாந்தின் தந்தையும், படத்தின் தயாரிப்பாளருமான தியாகராஜன். பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
சாஹசம்னு பெயர் வைக்க என்ன காரணம்?
 
ஹீரோ நிறைய சாஹசங்கள் செய்யக் கூடிய சாமர்த்தியசாலி. சாதனை செய்றதுன்னு சொல்றோமில்லையா. அதை படைக்கிறதைதான் சாஹசம்னு சொல்றோம். கஷ்டமான விஷயங்களை சர்வசாதாரணமா செய்றது. இதுல ஹீரோ எல்லாத்தையும் சர்வ சாதாரணமா செய்திட்டு போய்டுவார். 
 
சாஹசம் என்ன மாதிரியான படம்?
 
சாஹசம் ஒரு வித்தியாசமான படமா இருக்கும். படத்துல நிறைய ஆக்ஷன், காமெடின்னு என்டர்டெய்ன்மெண்ட் நிறைய இருக்கு. எல்லோருக்கும் படம் பிடிக்கும்.
 
பாடல்கள் பற்றி சொல்லுங்க?
 
தமன் ரொம்ப கேர் எடுத்து இந்தப் படத்துக்காக அஞ்சு பாட்டு நல்லா பண்ணித் தந்திருக்கார். அதை நல்ல சிங்கர்ஸை வச்சு பாட வச்சிருக்கார். அனிருத், சிலம்பரசன், லட்சுமி மேனன், ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன் பாடியிருக்காங்க. மோஹத் சௌகான் இந்தியில் பாப்புலர் சிங்கர், அவர் ஒரு பாடல் பாடியிருக்கார். 
 
பாடல்களை எங்கு படமாக்கிறீங்க?
 
பாடல்கள் சிறப்பா வந்திருக்கிறதால வித்தியாசமான லோகேஷன்ல படமாக்கணும்னு ஜப்பான், மலேசியால இதுவரைக்கும் யாரும் போகாத இடங்கள்ல ஷுட் பண்ணியிருக்கோம். சாங்ஸ் நல்லா வந்திருக்கு. 
 
ஹீரோயின்...?
 
புதுசா அமண்டான்னு ஒரு ஆஸ்திரேலியன் பொண்ணை இன்ட்ரடியூஸ் பண்ணியிருக்கோம். அந்தப் பொண்ணு ஒரு ரவுண்ட் வரும். சாஹசத்துல டிபரண்டான யங் ஹீரோயினைப் பார்க்கலாம். 
 
மற்ற நடிகர்கள்?
 
படத்துல நிறை ஆர்டிஸ்ட் நடிச்சிருக்காங்க. நாசர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், நளினி, ஜான் விஜய், ஊர்வசி, திவ்யதர்ஷினி இந்த மாதிரி ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கு. நர்கிஸ் பக்ரி ஒரு பாடலுக்கு ஆடியிருக்காங்க.
 
படத்தை முடிக்க ஏன் இவ்வளவு காலதாமதம்?
 
படம் நல்லா வரணுங்கிறபோது டைம் ஆகத்தான் செய்யும். ஒரு சாங்குக்கு பத்து நாள் பன்னிரெண்டு நாள் ஆகியிருக்கு. ஒரு சாங் மலேசியாவுல, ஒரு சாங் ஆஸ்திரேலியாவுல, ஒரு சாங் ஜப்பான்ல. அதுக்கான பிளானிங், ட்ராவல், செட்ஸ்னு நிறைய நாள் ஆகுது. என்னைக்கும் ஷுட்டிங் போய்கிட்டுதான் இருக்கு. பெருசா வரணும்னா கொஞ்சம் டைம் எடுக்கத்தான் செய்யும். 
 
மலேசியாவுல பாடல் எடுக்க என்ன காரணம்?
 
பிரசாந்துக்கு எல்லா ஊர்லயும் ஃபேன்ஸ் இருக்காங்க. கதைப்படி நாயகி மலேசியா போவாங்க. அங்க ஸயாங்னு ஒரு வார்த்தையை - அப்படீன்னா லவ் - அடிக்கடி சொல்வாங்க. அது அந்தப் பாடல்ல வர்றதால மலேசியாவில் அந்தப் பாட்டை ஷுட் பண்ணுனோம். 
 
மது அருந்திகிட்டு பாடற மாதிரி இப்போ வர்ற எல்லா படத்திலும் ஒரு பாட்டு இருக்கு. சாஹசத்தில் எப்படி?
 
இந்தக் கதையில மது அருந்துற மாதிரி காட்சி இல்லை. அதனால அந்த மாதிரி ஒரு பாட்டு வர்றதுக்கு வாய்ப்பில்லை.

Share this Story:

Follow Webdunia tamil