Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ட்ராபெரியின் ரியல் ஹீரோ சிஜி வொர்க்தான் - வித்தக கவிஞர் பா.விஜய்

Advertiesment
ஸ்ட்ராபெரி
பாடலாசிரியராக பரபரவென திரையுலகில் முன்னேறிய பா.விஜய் நடிகர் அவதாரம் எடுத்த பிறகு கொஞ்சகாலம் காணாமல் போனார். சிலர் பதுங்குவது பாய்வதற்கு என்பது போல், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என்று முப்பெரும் அவதாரங்களுடன் அவர் காட்டியிருக்கும் பாய்ச்சல்தான், ஸ்ட்ராபெரி. 
இந்தப் படத்தில் என்ன விசேஷம்?
 
திரைப்பட பாடலாசிரியராக, இரண்டு படங்களில் ஹீரோவாக உங்களுக்கு அறிமுகமான நான் இப்போது இந்த ஸ்ட்ராபெரி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆகியிருக்கிறேன். 
 
ஸ்ட்ராபெரி என்ன மாதிரியான படம்?
 
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது இப்போது வந்து கொண்டிருக்கிற த்ரில்லர் மூவிகளில் ஒருவகைதான். ஹாரர் காமெடி மூவி. அதேசமயத்தில், நான் முதலில் இயக்கி நடிக்கிற படம் என்பதால் வெறும் காமெடியாக முடிந்துவிடாமல், சமூகரீதியாக ஒரு பதிவு இருக்கணும் என்று ஆசைப்பட்டேன். அந்தமாதிரிதான் இந்தப் படத்தை முழுமைப்படுத்தியிருக்கோம்.
 
ஹாரர் எனும் போதே சிஜி வேலைகள் வந்துவிடுமே. அடிப்படையில் கவிஞரான நீங்கள் கம்ப்யூட்டர் வேலையை எப்படி சமாளித்தீர்கள்?
 
இந்தப் படத்தின் ரியல் ஹீரோ யார்னு பார்த்திங்கன்னா சிஜி வொர்க்தான். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இந்தப் படத்துல கிராபிக்ஸ் வொர்க் அமைஞ்சிடுச்சி. முதல்முறை இயக்கி நடிக்கிற படத்துலேயே இவ்வளவு பெரிய தொழில்நுட்பரீதியான சவாலை சந்திப்பதற்கான துணிச்சலை கொடுத்தது இந்தப் படத்துல பணிபுரிந்த ஆர்டிஸ்ட் அண்ட் டெக்னிஷியன்ஸ்தான்.

நடிகர்கள் பற்றி சொல்லுங்க...? 
 
சமுத்திரகனியோட கதாபாத்திரம் ரொம்ப வலிமையான கதாபாத்திரமா இதில் அமைஞ்சது. அதே மாதிரி தேவயானியோட கதாபாத்திரமும் ரொம்ப பேசப்படக் கூடிய கதாபாத்திரம். 
webdunia
இப்போது ஹாரர் என்றாலே காமெடிதானே...?
 
காமெடியைப் பொறுத்தவரை ரோபோ சங்கர், மயில்சாமி, இமான் அண்ணாச்சி அப்படிங்கிற அற்புதமான கூட்டணி ஜனரஞ்சகமான காட்சிகளை அமைக்க உதவியிருக்கு. 
 
படத்தைப் பற்றி இரண்டே வரியில் சொல்றதுன்னா...?
 
திரையரங்குக்கு வருகிற ஜனங்களை இரண்டரை மணிநேரம் திருப்திப்படுத்துகிற ஜனரஞ்சகத்துவமான, ஒரு சின்ன சமூக பதிவையும் சொல்கின்ற ஒரு அற்புதமான படமா இந்த ஸ்ட்ராபெரி இருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil