Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்கர் வென்றதால் அல்லாடிப் போனேன் - ரசூல் பூக்குட்டி

Advertiesment
ஆஸ்கர்
ரசூல் பூக்குட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.


 

 
முதல் படத்தை மலையாளத்தில் தயாரித்து இயக்குகிறவர், இந்தியிலும் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது, ஆஸ்கர் வென்ற பின் யாரும் அவரை அணுகாமல் மூன்று வருடங்கள் தவிக்கவிட்டதுதான் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. இனி ரசூல் பூக்குட்டி.
 
ஆஸ்கர் வென்ற பிறகு நிலைமை எப்படியிருந்தது?
 
பொதுவாகவே, உலக அளவில் ஆஸ்கர் வெல்பவர் பலருக்கும் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காது என்பது ஆஸ்கரால் வரும் சாபம்.
 
ரசூலுக்கும் அதைவென்ற அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்தத் தொழிலைவிட்டு வேறு ஏதேனும் வேலைக்கு போகலாமா என்று கூட எண்ணினேன்.
 
உங்களுடன் ரஹ்மானும் ஆஸ்கர் வென்றாரே, அதுவும் இரண்டு?
 
என்னுடைய நிலை மோசமாகி கிரெடிட் கார்டு பில்லைக்கூட கட்ட முடியாமல், வங்கியில் லோன்போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது, ரஹ்மானை சந்தித்தபோது அவரும் இதே நிலையில் இருந்தது கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
இதற்கு என்ன காரணம்?
 
ஆஸ்கர் விருதை வாங்கியதால், என்னுடைய சம்பளம் பன்மடங்காய் அதிகரித்திருக்கும் என எண்ணி எந்த இயக்குனரும் தன்னை அணுகவே யோசித்தனர்.
 
பிரம்மாண்டமான படங்களை எடுத்து பெயர் வாங்கிய பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்ஷாலியே இவ்வாறு எண்ணியதுதான் எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.
 
ஆஸ்கரால் வேறு என்ன இடர்பாடுகள் ஏற்பட்டது?
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

ஆஸ்கர் வாங்கியதாலே ‘அந்த விருது வாங்கியவருக்கு நாம் என்ன சொல்வது, அவரே படத்துக்கேற்ப எல்லாவற்றையும் செய்து விடுவார்’ என ஒரு சாராரும், ‘இவரிடம் நாம் நினைக்கும் வேலையை வாங்க முடியாது. 
 
அவரது விருப்பப்படிதான் ஒலியை வடிவமைப்பார். நமது எண்ணத்தைக் கண்டுகொள்ளவே மாட்டார்’ என இன்னொரு சாரரும் எண்ணினார்கள். இந்த இரண்டுமே தொழிலுக்கு இடைஞ்சல்தான்.

webdunia
 
இதற்கு நீங்கள் கண்டுபிடித்திருக்கும் மாற்று என்ன?
 
நமக்கு விருப்பமான பாணியில் ஒலி வடிவமைப்பு செய்ய நாமே படம் தயாரித்தால்தான் உண்டு. அதனால் என்னுடைய சினிமா நண்பர்கள் சிலருடன் இணைந்து ‘லெ பெண்டா எண்டர்டெயின்மெண்ட்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.
 
உங்களின் முதல் தயாரிப்பு?
 
மம்முட்டியை வைத்து விரைவில் படம் தொடங்க இருக்கிறேன். அந்தப் படத்தில் தயாரிப்பு மட்டுமின்றி, இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பு என மூன்று பணிகளையும் நானே செய்கிறேன். பாலிவுட்டிலும் படங்கள் இயக்கும் திட்டம் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil