சொல்ல முடியாது... அரண்மனை 3 கூட வரலாம் - சுந்தர் சி. பேட்டி
சொல்ல முடியாது... அரண்மனை 3 கூட வரலாம் - சுந்தர் சி. பேட்டி
Publish Date: Mon, 01 Feb 2016 (14:24 IST)
Updated Date: Mon, 01 Feb 2016 (14:30 IST)
அரண்மனை படத்தைத் தொடர்ந்து அரண்மனை 2 படமும் ஓடுவதால் மகிழ்ச்சியில் உள்ளார் சுந்தர் சி. அரண்மனை 3 படம் எடுக்கும் உற்சாகத்தை இந்த வெற்றி அவருக்கு தந்துள்ளது. அவரது சந்தோஷ பேட்டி உங்களுக்காக.
அரண்மனை 2 எடுக்கும் ஐடியா எப்படி ஏற்பட்டது?
அரண்மனை படத்தில் பேயின் பயமுறுத்தலை ரசிகர்கள் கடைசி வரை உணர க்ளைமாக்ஸ்சில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துவிட்டு இரண்டாவது பகுதி எப்போது எடுக்கப் போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் செகண்ட் பார்ட் கதைக்கு பொறி தட்டியது.
அரண்மனை 2 எடுப்பது என்று முடிவானதும் நீங்க செய்த முதல்வேலை என்ன?
கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திக்கிட்டு கால்ஷீட் கொடுத்தாங்க.
சித்தார்த், த்ரிஷா இரண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். கதையை கேட்டுட்டு உடனே கால்ஷீட் தந்தாங்க. ரெண்டு பேருமே முழு ஈடுபாட்டோடு நடிச்சாங்க.
த்ரிஷாவையும் அலறவிட்டிருக்கீங்களே...?
ஆமா. ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சாங்க.
கிளைமாக்ஸ் அம்மன் பாட்டு...?
இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தது அந்த அம்மன் பாடல்தான். அதை ஷுட் பண்றது பெரிய சவாலாகவே இருந்திச்சி.
படம் பார்க்கிற பலருக்கு சாமி வந்திருக்கு. படப்பிடிப்பு நடக்கிற போது எப்படி?
150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர்ஸ் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப பிரமிப்பான அனுபவமா இருந்தது.
முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் சூப்பரா வந்திருக்கு. சொல்ல முடியாது... அரண்மனை 3 கூட வர வாய்ப்பிருக்கு.