Publish Date: Fri, 21 Aug 2015 (09:55 IST)
Updated Date: Fri, 21 Aug 2015 (10:01 IST)
தமிழ், தெலுங்கில் தயாராகும் காமெடி ஹாரர் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. படத்தின் பெயர் நாயகி. ஏவிஎம்மில் நடந்த படப்பூஜைக்கு வந்தவர் படம் குறித்து பேசினார்.
நாயகியில் உங்க கதாபாத்திரம் பற்றி சொல்லுங்க?
இந்த கதாபாத்திரம் பற்றி சொல்லணும்னா, நான் இதுக்கு முன் நடித்திராத வேடம். காமெடி ஹாரர்ங்கிற இந்த ஜானரில் நான் இதுக்கு முன்னாடி நடிச்சதில்லை.
அரண்மனை 2 ஹாரர் படம்தானே?
அரண்மனை 2 பண்ணிட்டிருக்கேன். பட், இது ரொம்ப ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்.
நாயகி ஹீரோயின் ஓரியண்ட் படம்தானே?
இதை ஹீரோயின் ஓரிண்ட் ஃபிலிம்னு சொல்ல மாட்டேன். இதுவொரு டீம் வொர்க். இயக்குனர் எல்லாருடைய கேரக்டரையும் அழகா வடிவமைச்சிருக்கார். ரொம்ப ஸ்வீட்டா, காமெடி ரொம்ப அதிகமாகவும் இல்லாம குறைவாகவும் இல்லாம கண்டிப்பாக அனைவரும் என்ஜாய் பண்ணுவாங்க.
பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருந்தது?
இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி...
மேலும் அடுத்தப்பக்கம் பார்க்க
பர்ஸ்ட் போஸ்டர் வெளியிட்டப்போ பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைச்சது. குறிப்பா சோஷியல் மீடியாவுல. நிறைய பாராட்டுகள், வாழ்த்துகள். சரியாச் சொல்லணும்னா நானும், அம்மாவும் கம்ப்யூட்டர் முன்னால மூணு நாலு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.
நிறைய ஹாரர் படங்கள் இப்போது வர ஆரம்பிச்சிருக்கே?
நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. அதில் 90 சதவீத படங்கள் வெற்றியடைஞ்சிருக்கு. மக்களுக்கு அந்தப் படங்கள் மிகவும் பிடிச்சிருக்கு. என்னை கேட்டாலும் அந்த மாதிரி படங்களைதான் முதல்ல சொல்வேன்.
இந்தப் படம் அவற்றிலிருந்து எப்படி வித்தியாசப்படும்?
இது எப்படி வித்தியாசம்னா, என் லுக் பத்தி சொன்னா 1980 களில் உள்ள லுக். இந்த லுக் மொத்தப் படத்துலயும் இருக்கும். நான் பேயா இல்லை கொலை பண்ற கதாபாத்திரமாங்கிறதை இப்போ சொல்ல முடியாது.
ஷுட்டிங் போனப்புறம் அது தெரிஞ்சிடும். ஆனா, கண்டிப்பா டிபரண்டா இருக்கும். நான் இந்த மாதிரி கேரக்டர் இதுவரை பண்ணுனதில்லை. லுக் மட்டுமில்லை, கேரக்டரும் வித்தியாசமானது.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கறீர்களே?
இந்த நேரம் நானும் கொஞ்சம் வித்தியாசமாக பண்ணணும். அதனாலதான் இந்தப் படத்தை தேர்வு செய்தேன்.
நாயகி படத்தில் த்ரிஷா அழகா இருப்பாங்களா? கொடூரமாக இருப்பாங்களா?
இரண்டுமே.
நயன்தாரா மாயாங்கிற படத்துல நடிப்பதால் போட்டிக்கு இந்தப் படத்தில் நடிக்கிறீங்களா?
இல்ல. அது ரொம்ப டிபரண்ட் ஜானெர், இது ரொம்ப டிபரண்ட் ஜானெர். போட்டியெல்லாம் இல்லவே இல்ல. அப்படிப் பார்த்தா நிறைய ஹாரர் படம் வருது. இது எனக்குப் பிடிச்சிருந்தது, நடிக்கிறேன்.