Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க வெற்றிக்குப் பின்னால் நயன்தாரா இருக்கிறார் - மாயா ஹீரோ ஆரி பேட்டி

Advertiesment
மாயா
மாயா படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில், த்ரிஷா இல்லனா நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது.


 

 
ஒரு ஹாரர் படம் அதுவும் நாயகி மையப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமான நிகழ்வு.
 
அந்த மகிழ்ச்சியுடன் சக்சஸ்மீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். படத்தின் நாயகன் ஆரி, தனது பத்து வருட திரைவாழ்க்கையில் இப்படியொரு படத்துக்காகதான் காத்திருந்தேன் என்றார்.
 
மாயா வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி இருக்கிறது இந்த வெற்றி?
 
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆடியன்ஸ் மட்டும் படம் பார்த்திட்டு பாராட்டாம, பத்திரிகைகள், மீடியான்னு எல்லா பக்கத்திலிருந்தும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைக்கிறது சில படங்களுக்கு மட்டும்தான் அமையும். அந்தவகையில் மாயா படம் எனக்கு கிடைச்சதை அதிர்ஷ்டம்னு நினைக்கிறேன். 
 
படம் மற்ற இடங்களில் எப்படி போகிறது?
 
தமிழ்ல மட்டுமில்லை கேரளாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. தெலுங்குலயும் படம் நல்லாப் போகுது. அங்கேயும் சக்சஸ் மீட் நடத்தினோம். 
 
மாயா உங்களுக்கு என்ன மாதிரி அடையாளத்தை தந்திருக்கு?
 
நெடுஞ்சாலை படத்துக்கு அப்புறம் நான் வெளியே போகும்போது, தாடிக்குள்ளேயே இருந்ததால, என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சி. பிரஸ் பீப்பிளே சிலநேரம், நீங்க என்ன படம் பண்ணியிருக்கீங்கன்னு ஒரு அறிமுகம் மாதிரியே கேட்பாங்க.
 
இன்னின்ன படம் பண்ணியிருக்கேன்னு சொல்வேன். ஆரிங்கிற பெயரை தெரியும். ஆனா, ஆள் யார்ங்கிற ஒரு குழப்பம் இருந்துகிட்டே இருந்தது. மாயாவுக்குப் பிறகு அந்தப் பிரச்சனை இருக்காதுன்னு நம்பறேன்.
 
தெலுங்கில் படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கு?
 
மயூரி (மாயாவின் தெலுங்கு பெயர்) சக்சஸ்மீட் முடிச்சிட்டு,..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

ஹோட்டல்ல சாப்பிட்டு கைகழுவும்போது ஒருத்தர், நீங்க மயூரி ஹீரோதானேன்னு கேட்டு என்னுடன் போட்டோ எடுத்துகிட்டார்.

webdunia

 

 
ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சி. தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கிலயும் ரசிகர்கள் அடையாளம் தெரிஞ்சுக்கிற அளவுக்கு படம் ஹிட்டாகியிருப்பது பெரிய விஷயம்.
 
மாயா நாயகி மையப்படம் என்பதால், ஏன் இந்தப் படத்தில் நடிக்கணும் என்ற கேள்வி வந்திருக்குமே?
 
மாயா படத்துல கமிட்டான போது, ஏன் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படத்துல நடிக்கணும்னு நிறைய பேர் கேட்டாங்க. பட், அது சரியான முடிவுங்கிறதை படத்தோட வெற்றி நிரூபிச்சிருக்கு.
 
நயன்தாரா பற்றி...?
 
எல்லோருடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாங்கன்னு சொல்வாங்க. எங்களோட வெற்றிக்குப் பின்னால் நயன்தாரா இருக்கிறாங்க.

Share this Story:

Follow Webdunia tamil