Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல படம் எடுத்தா உலகமே நம்மை பாராட்டும் - கார்த்தி பேட்டி

Advertiesment
மெட்ராஸ்
தொடர் தோல்விகளுக்கு மெட்ராஸ் முற்றுப்புள்ளி வைத்த மகிழ்ச்சியுடன் படத்தின் சக்சஸ் மீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கார்த்தி. அவரது அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களை கழுவி ஊற்றிய அதே பத்திரிகைகள்தான் மெட்ராஸை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தூக்கி நிறுத்தியுள்ளன.

நல்ல படம் என்றால் பாராட்டு நாலாபுறத்திலிருந்தும் கொட்டும் என்ற ஞானத்துடன் தொடங்கியது கார்த்தியின் பேச்சு. 
 
ஒவ்வொரு வாட்டியும் தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கீங்க. இந்தமுறை சரியா பண்ணியிருக்கீங்கன்னு சொல்லும் போது அதைவிட பெரிய விஷயம் எதுவுமேயில்லை. ஒவ்வொருத்தரும் கையை பிடிச்சு, இதுதான்யா படம்னு சொன்னீங்க. அதெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திச்சி.

ஏன்னா, தியேட்டர்ல கிடைச்ச ரெஸ்பான்ஸ் ரொம்ப நல்லா இருந்திச்சி. நாங்க எதிர்பார்க்காத இடங்கள்லகூட கிளாப்ஸ் கிடைச்சது. ஆடியன்ஸ் நல்லா என்ஜாய் பண்ணினாங்க. அதைவிட நீங்க... பத்திரிகையாளர்கள் அப்ரிசியேட் பண்ணுனது முக்கியமான விஷயம்.

 
ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளத்தையும் கார்த்தி விட்டு வைக்கவில்லை. அவற்றின் பாஸிடிவான விஷயங்களை இந்தப் படம்தான் அவருக்கு உணர்த்தியுள்ளது.
 
என் ப்ரெண்டோட பையன், சின்ன பையன் - சொல்லியிருக்கான். ஐயோ கார்த்தி படம் நல்லாயிருக்காது நான் வரலைன்னு. அப்புறம், ட்விட்டர்ல வரட்டும் நான் பார்த்திட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான். ட்விட்டர்ல எல்லாம் நல்லா சொல்றாங்க, பத்திரிகையில நல்லா எழுதியிருக்காங்க. அதனால படத்துக்கு வர்றேன்னு சொல்லியிருக்கான். இந்தப் பையன் படம் பார்த்திட்டு, அண்ணா படம் நல்லாயிருக்குன்னு சொல்றான்.

மெட்ராஸின் வெற்றிக்கு முக்கிய காரணம், படத்தோட டீம் வொர்க். ஒவ்வொரு ஏரியாவிலும் அடித்துத் தூள் கிளப்பியிருக்கிறார்கள். நம்மைவிட நம்முடன் நடித்தவர்கள் நன்றாக செய்திருக்கிறார்கள் என்பது கார்த்திக்கும் தெரிந்துள்ளது.
 
இந்த மாதிரி ஒரு யங் டீம்கூட வேலை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். இங்க இருக்கிறவங்க வெறும் நடிகர்கள் மட்டும் கிடையாது. அவங்க இயக்குனர்களும்கூட. நிறைய படிப்பவர்களும்கூட.

அவங்க ஒவ்வொருத்தர்கிட்ட பேசும் போதும் இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு ஏதோ கத்துகிட்டேன்னு சொல்லலாம். இவங்க மத்தியில நான் தேறுவேனான்னு பயந்துகிட்டே இருந்தேன். கொஞ்சம் தேறியிருக்கேன்னு இப்போ சந்தோஷமா இருக்கு. 
webdunia
மெட்ராஸின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது ஸ்கிரிப்ட். முழுமையாக முடிந்த ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்புக்கு சென்றால் என்னவாகும் என்பதற்கு மெட்ராஸ் சிறந்த உதாரணம். கார்த்தியே அதனை ஒப்புக் கொள்கிறார்.
 
ஸ்கிரிப்ட் படிச்சப்போ என்ன இருந்ததோ. நாங்க என்ன எடுக்கப் போறோம்னு நினைச்சமோ அதைவிட பலமடங்கு நல்லா வந்திருக்கு. அதுக்கு காரணம் இந்த டீமோட அயராத உழைப்பு. முக்கியமா ஷுட்டிங் ஸ்பாட்ல அந்த மக்களோட ஒத்துழைப்பை மறக்கவே முடியாது.  எங்க ஏரியாவுல படம் எடுக்குறீங்க, நல்லா எடுங்கன்னு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்.

சுவரை வைத்து ஒரு படம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. ஆளை வைத்து படம் எடுத்தாலே யாரும் பார்க்காத நிலையில் சுவரை வைத்து ஒரு படம். எப்படி இந்த அனுபவம் இருந்தது?
 
இந்த மாதிரி ஒரு படம் எடுக்கும் போது கண்டிப்பா புரொடியூசருக்கு ஒரு பயம் இருக்கும். ஏன்னா இதை ஏறி வந்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வாங்க மாட்டாங்க.
webdunia

நீங்க சுவரை வச்சு படம் எடுக்குறீங்க. ஆளை வச்சு எடுத்தாலே பார்க்க மாட்டாங்கன்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா இரஞ்சித் மேல நம்பிக்கை இருந்திச்சி. முக்கியமா ஸ்கிரிப்ட் நல்லா இருந்திச்சி. எல்லா கதாபாத்திரமும் முழுமையா இருந்திச்சி. 
 
படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் கார்த்தியை எப்படி ஃபீல் பண்ண வைக்கிறது?
 
நல்ல படம் எடுத்தா உலகமே சேர்ந்து நம்மை பாராட்டும். நம்மை தூக்கி நிறுத்துங்கிறதுக்கு இந்தப் படம் மிகப்பெரிய உதாரணமாக இருக்கு. 
 
அடுத்து...?
 
அடுத்து கொம்பன் படம் பண்றேன். அது ஒரு குடும்பப் படம். இதே மாதிரியே நல்லா இருக்கும்னு நம்பறேன்.

Share this Story:

Follow Webdunia tamil