Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமக்கு அரசியல் சரிவராது என்று எனது ரசிகர்களே கூறுகிறார்கள் - கமல் பேட்டி

Advertiesment
கமல்
நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்களுடன் இணைந்து கமல் சுத்தப்படுத்தினார். அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பலர் கமலை வாழ்த்தினர். பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அரசியல் நோக்கோடுதான் இந்தப் பணியில் பங்கெடுத்திருக்கிறீர்களா?
 
ஓட்டுப் போடும் எல்லோரும் அரசியல்வாதிகள்தான்.
அரசியலுக்கு வருவீர்களா...?
 
முன்பு என்னுடைய ரசிகர்கள், அரசியலில் நுழைந்து ஏதாவது நல்லது செய்யலாம் என்பார்கள். அப்படி சொன்னவர்களே இப்போது, அண்ணே நமக்கு அரசியல் சரிவராது, எப்போதும் போல தனித்தே இருப்போம் என அறிவுரை கூறுகிறார்கள். என் ரசிகர்கள், அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிப் போகும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்களே அப்படி சொல்லும் போது நான் எப்படி அரசியலுக்கு வருவேன்.
 
பிறந்தநாளில் ஏரியை சுத்தப்படுத்துவதை எப்படி பார்க்கிறீர்கள்?
 
இது ஒருநாள் வேலை கிடையாது. தொடர் வேலை. ஏரி என்பது பொதுமக்களின் சொத்து. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறந்தநாளில் எல்லோரும் கேக் வெட்டுவார்கள். நான் இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதனை பெருமையாக நினைக்கிறேன். என் நாடு சுத்தமாக நான் இதில் பங்கேற்பதால் என் பிறந்தநாள் மேலும் சிறப்படைந்ததாக நினைக்கிறேன்.

பாரதிய ஜனதாவில் சேர ரஜினிக்கு அழைப்பு வந்திருக்கிறது, இது பற்றி உங்கள் கருத்து?
 
ஒருவரை காட்டி அவரது பெயர் என்ன என்று கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? எனக்கு அழைப்பு வரும்போது அதுபற்றி பேசலாம்.
webdunia

 
உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
 
மக்களின் அன்புதான் சாதனை. இத்தனை கேமராக்கள் என்னை திரும்பிப் பார்க்கிறது. கேமராவில் முகம் இல்லாமலிருந்த என்னை இத்தனை கேமராக்கள், வீடியோக்கள் படம் பிடிக்கிறது. இவ்வளவு பேர் என்னை அன்புடன் பார்க்கிறார்கள், வாழ்த்து சொல்கிறார்கள். நான் இன்று ஒருவன் இருக்கிறேன் என்று என்னை அடையாளம் காட்டி எனக்கு அறிமுகம் தந்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
 
பொதுமக்களுக்கு உங்கள் பிறந்தநாள் செய்தி...?
 
தமிழக மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. நான் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவது இல்லை. பிறந்தநாளையொட்டி இந்த தூய்மைப் பணியை மேற்கொண்டு இருக்கிறேன்.
 
விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் இதில் எது முதலில் வெளிவரும்?
 
உத்தம வில்லன் என்று நினைக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil