நிஜமாகவே யாராவது அடிக்க வந்தால் ஓடிவிடுவேன் - விஜய் சேதுபதி ஜாலி பேட்டி
நிஜமாகவே யாராவது அடிக்க வந்தால் ஓடிவிடுவேன் - விஜய் சேதுபதி ஜாலி பேட்டி
Publish Date: Thu, 29 Sep 2016 (12:32 IST)
Updated Date: Thu, 29 Sep 2016 (15:14 IST)
எனர்ஜியே உன் பெயர்தான் விஜய் சேதுபதியா என்றுதான் கேட்கத் தோன்றும். இந்த வருடத்தில் றெக்க அவரது ஆறாவது படம். அக்டோபர் 7 படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வருஷம் றெக்க எனக்கு ஆறாவது படம். இரண்டு வாரத்துக்கு ஒரு படமான்னு நிறைய மீம்ஸ் வருது. அதைப் பார்க்க எனக்கு ஜாலியாவும், காமெடியாவும் இருக்கு. ஆனா, ஒரு படத்தில் நடித்து முடிக்க எனக்கு மூணு மாதங்களாவது ஆகும். சதீஷ் நடிப்பில் ஒரேநாளில் றெக்க, ரெமோ, தேவின்னு மூணு படம் வருது, அவரை யாரும் எதுவும் கேட்க மாட்டேங்கிறீங்க.
றெக்க என்ன மாதிரியான படம்...?
றெக்கயை ஒரு ஃபேண்டஸி படமாத்தான் பார்க்கிறேன். ஃபேண்டஸியையும் யதார்த்தமாகத்தான் பார்க்கிறேன். இப்படி சொல்லிதான் தப்பிச்சுகிட்டிருக்கேன். மற்ற நடிகர்கள் அடித்துப் பறக்கவிடும்போது ரொம்ப ஆசையா இருக்கும். அந்த ஆசையை இதில் நிறைவேற்றியிருக்கேன். நிஜமாகவே என்னை யாராவது அடிக்க வந்தால் ஓடிவிடுவேன்.
இந்தப் படத்தில் நடிக்க காரணம்...?
ரத்ன சிவாவின் வா டீல் படத்தோட டரெய்லர் பிடித்துப் போய்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஒரு மாற்றம் வேணும்னுதான் இந்தப் படத்தில் நடிச்சேன். இந்த மாதிரி படங்கள்லதான் நடிப்பேன்னு என்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்க நான் விரும்பலை. ஒரே மாதிரி நடித்தால் எனக்கும் போராடிக்கும், பார்க்கிறவங்களுக்கும் போரடிக்கும்.
அதுவும் செமையான கமர்ஷியல் படம்தான். நாங்கக்கூட அந்தளவு எதிர்பார்க்கலை, ஆனா உங்க (நிருபர்கள்) எழுத்தில் உங்க ரசனையை கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அவர் ஒருசென்சிபிள் ஆர்ட்டிஸ்ட். அறிவுள்ள நடிகை. நடிக்கப் போகும் காட்சி, மனநிலை, சூழல், வசனம் எல்லாம் கேட்டுத் தயாரான பிறகுதான் நடிப்பார்.
மக்கள் செல்வன் பட்டம்...?
அதனை பட்டமாக நினைக்கலை. ஒரு இயக்குநர் அவருடைய மாணவனுக்கு வைத்த அன்பு பெயராக எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமா அதனை எடுக்க மாட்டேன்.