Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மோராவில் காமெடி தூக்கலாக இருக்கும் - கார்த்தி பேட்டி

காஷ்மோராவில் காமெடி தூக்கலாக இருக்கும் - கார்த்தி பேட்டி
, வியாழன், 27 அக்டோபர் 2016 (11:06 IST)
தீபாவளியின் முக்கியமான அட்ராக்ஷன் கார்த்தியின் காஷ்மோரா. பிரமாண்டமாக தயாராகியிருக்கும் அந்தப் படத்தில் நடித்ததற்கான காரணங்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கார்த்தி கூறினார்.

காஷ்மோராவை தேர்வு செய்ய என்ன காரணம்?
 
கோகுலின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை நான் ரொம்பவும் ரசித்தேன். ஆறு கதாபாத்திரங்களை வச்சு மூணு கதைகளை பண்ணியிருப்பார். காஷ்மோரா படத்தின் கதையை சொல்ல வந்த போதும், மூன்று கெட்டப் கதைகளையும் வெவ் வேறு நாளில்தான் சொன்னார்.
 
காஷ்மோராவின் கதை என்ன?
 
பேய் படம் பண்ணலாம்னுதான் இந்தப் படத்தை ஆரம்பிச்சோம். இதில் காமெடி, வரலாறு, பேய்னு எல்லாமே இருக்கு.
 
உங்களுடைய கெட்டப்...? 
 
ராஜ்நாயக், காஷ்மோரான்னு இரண்டுவித கெட்டப்பில் வருவேன். ராஜ் நாயக் வரலாற்று கதாபாத்திரம். படத்தில் முப்பது நிமிடம்தான் இந்த போர்ஷன் வரும். 
 
பிரமாண்டமான படம் ரிஸ்க் இல்லையா?
 
பெரிய முதலீட்டில் படம் தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களிடையே  தயக்கம் இருக்கு. கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவது உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. ஒரு இயக்குநர் சொல்ற கதையில் காமெடி, சுவாரஸ்யம், பிரம்மாண்டம்னு அனைத்துமே இருக்கும் போது ரிஸ்க் எடுத்து பார்க்கலாமே என்று ஆரம்பித்தது தான் காஷ்மோரா.
 
நயன்தாரா...?
 
ஹீரோவுக்கு இணையான ரோல் நயன்தாராவுக்கு. ரத்னமாதேவிங்கிற கதாபாத்திரம். காஸ்ட்யூம்ல இருந்து சின்னச் சின்ன அணிகலன்கள், கலர்ஸ் வரைக்கும் அவங்களே முழு ஈடுபாட்டோட தேர்ந்தெடுத்தாங்க. அவங்களுக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கு. 
 
ஸ்ரீதிவ்யா...?
 
ஸ்ரீதிவ்யா இதில் மாடர்ன் ஜர்னலிஸ்டா வர்றாங்க.
 
இதில் யார் உங்க காதலி...?
 
இந்தப் படத்துல காதலே இல்லை. காதல் இல்லாம படம் எடுக்க மாட்டீங்களான்ன கேட்கிறவங்களுக்கு இந்தப் படம் சரியான பதிலா இருக்கும்.
 
அப்போ, சீரியஸ் படமா?
 
படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தால், சீரியஸாக இருக்கும். ஆனால், படத்தில் காமெடி தான் தூக்கலாக இருக்கும். நீங்கள் பார்க்கும் காஷ்மோராவுக்குள் ஒரு ப்ளாக் காமெடி இருக்கு.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடுக்கிப்பிடி... முழு விவரம்