திறமை இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை - சுவாதி பேட்டி
திறமை இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை - சுவாதி பேட்டி
Publish Date: Thu, 20 Oct 2016 (10:39 IST)
Updated Date: Thu, 20 Oct 2016 (10:49 IST)
சுப்பிரமணியபுரம் சுவாதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் யாக்கை. இந்தப் படம் குறித்து பத்திரிகையாளர்களுடன் சுவாதி உரையாடினார். அவர் அளித்த பேட்டியிலிருந்து...
யாக்கை பற்றி சொல்லுங்கள்...?
சுப்பிரமணியபுரம் படத்துக்குப் பிறகு யட்சன், வடகறி, படங்களில் வேறுவிதமான வேடங்களில் நடித்தேன். இப்போது யாக்கை படத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் ஆசிரியராக வருகிறேன்.
படப்பிடிப்பு எப்படி இருந்தது?
வேலை செய்வது போல் இல்லாமல் ஜாலியாக இருந்தது. இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன் என்னிடம், உன் தெத்துப்பல்லுக்கே தனிஷாட் வைத்திருக்கிறேன் என்று கேலி செய்தார்.
இசை...?
யுவன் ஷங்கர் ராஜா அற்புதமாக இசையமைத்துள்ளார். அவர் இசையில் தனுஷ் பாடி இருக்கிறார். அந்த பாடல் காட்சியில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
உங்களுக்கு திருமணமாகிவிட்டதாக சொல்லப்பட்டதே?
எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக யாரோ வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையை சொன்னால் எனக்கு பாய் பிரண்டுகள் கூட கிடையாது. ஒரு கால கட்டத்தில் எல்லா நாயகிகளைப் பற்றியும் இப்படி செய்தி வரும். அது போல் தான் இதுவும்.
வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
வதந்திகளுக்கு விளக்கம் சொல்லி போரடித்து விட்டது. இதுவும் எனக்கு ஒரு விளம்பரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான்.
எப்படிப்பட்டவர் கணவராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்னுடைய அப்பா மாதிரி நல்ல குணம் கொண்ட ஆண் அமைய வேண்டும். ஒரே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்தால் புரிந்து கொள்ள முடியும். நேரம் வரும் போது பார்க்கலாம்.
தமிழில் அதிகமாக பார்க்க முடியவில்லையே?
மலையாளம், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். பாராட்டுகிறார்கள். ஏனோ தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லை. யாக்கை படம் எனக்கு பெயர் சொல்லும் படமாக அமையும்.
நீங்கள் கவர்ச்சியாக நடிப்பதில்லையே?
திறமை இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை.