Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடிவேலு இல்லையென்றால் கத்தி சண்டையில் நடித்திருக்க மாட்டேன் - விஷால் பேட்டி

Advertiesment
விஷால்
நவம்பர் 18 வெளியாகும் கத்தி சண்டை படத்துக்கு யு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. விஷாலைப் பொறுத்தவரை இது முக்கியமான படம். சூரி, வடிவேலு இணைந்து நடித்திருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கத்தி சண்டை குறித்து விஷால் பேசியவை...

 
கத்தி சண்டையில் நடிக்க உள்ள காரணம்?
 
கத்தி சண்டை பண்றதுக்கு முக்கியமான காரணம் வடிவேலு அண்ணன். அவர் இல்லைன்னா கண்டிப்பா இந்தப் படம் பண்ணியிருக்க மாட்டேன்.
 
ஏன்...?
 
ஒரு நடிகர்கிட்ட கால்ஷீட் இல்லைன்னா இன்னொருத்தர்கிட்ட போகலாம். அவரும் இல்லைன்னா வேறொருத்தர்கிட்ட போகலாம். ஆனால், வடிவேலு இல்லைன்னா வேறு யாரிடமும் போக முடியாது. அவருடைய தனித்தன்மைதான் அதுக்கு காரணம். சுராஜ் கதையை சொன்ன போது, வடிவேலு அண்ணன் பண்ணினால் நான் நடிக்கிறேன்னுதான் சொன்னேன்.
 
ஏன் வடிவேலை மக்களுக்குப் பிடிக்கிறது?
 
நான் எங்கே போனாலும், வடிவேலுடன் நடிக்கிறீங்களாமே, படம் எப்போ வரும்னுதான் எல்லோரும் கேட்பாங்க. ஏன்னு கேட்டதுக்கு, எங்க வாழ்க்கையில நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கு. வீட்டிற்கு போய் அரைமணிநேரம் காமெடி பார்த்துட்டுதான் தூங்குவோம்னு சொன்னாங்க.

webdunia
 
சூரி...?
 
கத்தி சண்டையில் சூரியும் ஒரு முக்கிய கதாபாத்திரம் பண்ணியிருக்கார். இனிமேல் சூரி, வடிவேலு எப்போ சேர்ந்து நடிப்பாங்கன்னே தெரியாது.
 
கத்தி சண்டை அடிதடி படமா?
 
இந்தப் படத்தில் ஒரு கருத்து இருக்கு. கண்டிப்பா அந்த கருத்து அனைவருக்கும் பிடிக்கும்.
 
தயாரிப்பாளர்...?
 
முந்தைய படங்களின் பிரச்சனையால் புதிதாக எடுக்கிற படங்கள் வெளியே வருமா வராதாங்கிற ஒருநிலைதான் திரையுலகில் இருக்கு. இந்த மாதிரி நேரத்தில் நந்தகோபால் மாதிரியான தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியாகராஜன் குமாரராஜா படத்தில் பெண் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி