Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன் - இனியா பேட்டி

Advertiesment
நடிகை இனியா
தீபாவளிக்கு திரைக்கு வந்த, திரைக்கு வராத கதை திரைப்படத்தில் இனியா நடித்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்துள்ளவர் அளித்த பேட்டியின் விவரங்கள்...

 
நீங்க சினிமாவுக்கு வர என்ன காரணம்?
 
எட்டு வயசிலேயே ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்புறம் நிறைய ட்ராமாக்களில் நடித்தேன். என்னோட அப்பா மம்முட்டியுடன் நடிச்சிருக்கார். தம்பி சிங்கர். அக்கா மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறார். அதனால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்.
 
வாகை சூட வா படத்துக்குப் பிறகு அதிகமாக தமிழில் பார்க்க முடியவில்லையே?
 
அந்தப் படத்தில் நான் நடித்த போது பிளஸ் டூ படிச்சிட்டிருந்தேன். படிப்புக்காக அதிக படங்களில் நடிக்கவில்லை.
 
தமிழ் சரளமாக வருதே...?
 
தமிழ் படங்களில் நடித்துதான் தமிழ் கத்துகிட்டேன். நிறைய புக்ஸ் வாங்கியும் படிச்சேன். தமிழில் எழுதவும் கத்துகிட்டேன்.
 
உங்களுடைய பிளஸ்னு எதை நினைக்கிறீங்க...?
 
என்னுடைய கண்ணும், என்னுடைய சிரிப்பும்.
 
எந்த மாதிரி வேடங்களில் நடிக்க ஆசை?
 
அருந்ததி மாதிரி ஆக்ஷன் சண்டைன்னு நடிக்கணும்னு ஆசைப்படுறேன். பழிவாங்குற கேரக்டரில் நடிக்கிறது என்னுடைய கனவுன்னே சொல்லலாம்.
 
கவர்ச்சி...?
 
கதைக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சியாக நடிப்பேன், நோ சொல்ல மாட்டேன்.
 
கதாநாயகி வேடம் கிடைக்காததில் வருத்தம் உண்டா?
 
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. நல்ல வேடங்களில் நடிக்கும் நடிகையாக நீண்டகாலம் சினிமாவில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். எனவே அழுத்தமான பாத்திரங்களில் விரும்பி நடிக்கிறேன்.
 
நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்?
 
தமிழில் பொட்டு, காதல் சொல்ல நேரமில்லை, ரெண்டாவது படம், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களில் குறைவான நேரம் வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி