Publish Date: Tue, 22 Dec 2015 (11:12 IST)
Updated Date: Tue, 22 Dec 2015 (11:21 IST)
ஈட்டி படத்தின் சக்சஸ் மீட். தொடர்ந்து தோல்விகளை தந்த அதர்வாவுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கிடைத்த அரிய சந்தர்ப்பம். அதுவும், கடும் மழைக்கிடையில் படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதர்வாவின் பேச்சில் அந்த வியப்பும், மகிழ்ச்சியும் மாறி மாறி டாலடித்தன.
ஈட்டி படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கீங்க. அது பற்றி சொல்லுங்க...?
இந்தப் படத்து மேல நிறைய நம்பிக்கை வச்சு நடிச்சேன். அத்லெடிக்கா முழுசா மாறினேன். சிக்ஸ்பேக்குக்காக பல மாதங்கள் கஷ்டப்பட்டேன். அப்படி கடுமையாக உழைச்ச ஈட்டி வெற்றி பெற்றிருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு.
மழை ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சொல்லுங்க...?
இந்தப் படத்துக்காக ரெண்டு வருஷம் உண்மையிலே எல்லோரும் வொர்க் பண்ணுனோம். எக்கச்சக்கமான தடைகளை சந்திக்க வேண்டியதாயிருந்தது. படம் முடிஞ்ச பிறகு இப்ப ரிலீஸாகும், அடுத்த மாசம் ரிலீஸாகும்னு எக்கச்சக்க கன்பூஷன்ஸ். ஒரு கட்டத்துல, மைக்கேல் சார் (தயாரிப்பாளர்) டிசம்பர் 4 படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு சொன்னப்போ செம சந்தோஷமாக இருந்தது. நாம கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கப் போகுதுன்னு.
ஆனா, மழை அதை அனுமதிக்கலை இல்லையா...?
ஆமா. டிசம்பர் பர்ஸ்ட் நியூஸ்ல சொன்னாங்க. மழை வரப்போகுது, 100 வருஷத்துல பெய்யாத மழை பெய்யப் போகுதுன்னு. என்னடா இது நம்ம டைம் சரியே இல்லையேன்னு நினைச்சேன். எனக்கும் ரியாக்ஷன் இல்ல, ரவிக்கும்(இயக்குனர்) ரியாக்ஷன் இல்ல, மைக்கேல் சாருக்கும் ரியாக்ஷன் இல்ல.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருந்திச்சி?
மழையை பார்த்த பிறகு, நம்மை சுத்தி உள்ள மக்கள் எல்லாம் நல்லாயிருந்தா போதும்ங்கிற மைன்ட் செட்டுக்கு வந்திட்டோம். படம், ரிலீஸ் எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டோம்.
டிசம்பர் 11 படத்தை வெளியிடும் துணிச்சல் எப்படி வந்தது?
டிசம்பர் 11 படத்தை ரிலீஸ் பண்ணுவோம். மக்கள் எல்லோரும் நொந்து போயிருக்காங்க. நம்ம வேலை அவங்களை என்டர்டெய்ன் பண்றது. அதை செய்வோம்னு மைக்கேல் சாரும், சிவா சாரும் சொன்னாங்க. அப்படி அவங்க எடுத்த முடிவுதான் கரெக்டான முடிவா இருந்திச்சி.
கஷ்டப்பட்டு நடித்து, கஷ்டங்களுக்கிடையில் வெளியான ஈட்டி வெற்றி பெற்றிருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க?
ரொம்ப வருஷமாகவே இந்த நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன். ஒரு சக்சஸ் மீட்ல போய் பேசணும்னு. அதுக்கான என் எல்லா கிரெடிட்டும் ஈட்டி டீமுக்குதான் சேரணும்.
மத்த படங்களுக்கும் ஈட்டிக்கும் என்ன வித்தியாசம்? இந்தப் படத்துக்கு அதிகமாக உழைச்சீங்களா?
ஒவ்வொரு படத்துக்கும் 100 சதவீத ஈடுபாடு தேவைன்னா நான் 120 சதவீதம் ஈடுபாடு காட்டுவேன். எல்லா படத்துக்கும் அப்படித்தான். ஆனா அதோட ரிசல்ட் நம்ம கையில இல்ல. ஆனா, இந்தப் படத்துல நான் போட்ட எபோர்ட் ஒவ்வொண்ணுக்கும் ரிசல்ட் காண்பிச்ச என்னோட டீமுக்கு நான் நன்றி சொல்லணும்.