Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்டிங்கோட ஸ்பெல்லிங்கே எனக்கு தெரியாது - ஜெயப்ரதா பேட்டி

ஆக்டிங்கோட ஸ்பெல்லிங்கே எனக்கு தெரியாது - ஜெயப்ரதா பேட்டி

Advertiesment
ஜெயப்ரதா
ஒருகாலத்தில் கனவுக்கன்னியாக இருந்த ஜெயப்ரதாவின் மகன் சித்து இப்போது ஹீரோ.


 


உயிரே உயிரே படத்தில் அறிமுகமாகியுள்ள தனது மகன் சித்து குறித்தும், சித்துவின் அறிமுகம் தமிழில் அமைந்தது குறித்தும் ஜெயப்ரதா விளக்கமாக பதிலளித்தார்.
 
உங்கள் மகன் இப்போது ஹீரோ. எப்படி ஃபீல் பண்றீங்க?
 
ரொம்ப ரொம்ப பெருமையாயிருக்கு. ஏன்னா இது என்னோட லைஃப்ல ரொம்ப சிறப்பான தருணம். எனக்கு மட்டுமில்ல, எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும். 
 
நீங்க முதல்முதலில் இன்டஸ்ட்ரிக்கு வந்ததையும், உங்க மகன் இப்போது வந்திருப்பதையும் எப்படி பார்க்கிறீங்க?
 
நான் சினிமாவுக்கு வரும் போது, ஆக்டிங்கோட ஸ்பெல்லிங்கே தெரியாது. அவ்வளவு யங் ஏஜ்லயே சினிமாவுக்கு வந்தேன். பட், இன்டஸ்ட்ரி எனக்கு நிறைய நல்ல கதாபாத்திரங்களை தந்தது. சித்துக்கு அப்படியில்ல. அவனுக்கு எல்லாமே தெரியும்.
 
ஏன் முதல் படம் தமிழில்...?
 
இந்தியில, தெலுங்குல நல்ல ஸ்கோப் இருக்கிறப்போ ஏன் தமிழ்னு நிறைய பேர் கேட்டாங்க. ஏன்ன, தமிழ்ல பிராட் ஹார்ட் இருக்கு. புதுமுகங்களை ஏத்துக்கிற நேச்சர் இருக்கு. நானும் அதில் ஒருத்தி. அதனால்தான் சித்துவை தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கேன்.
 
ஹன்சிகா சீனியர் நடிகை, சித்து புதுமுகம். இந்த காம்பினேஷன் எப்படி...?
 
ஹன்சிகா கூட ஒரு புதுமுகமங்கிற மாதிரி படத்துல தெரியாது. இரண்டு பேரும் ஹெல்த்தி காம்படிஷனா பண்ணியிருக்காங்க. 
 
நீங்க ஒரு பாடல் பாடியிருக்கீங்க, அது எப்படி நடந்தது?
 
சித்து, டைரக்டர் எல்லாம், படத்துல எல்லோரையும் கரெக்டா நீங்களே பிக்ஸ் பண்ணிட்டீங்க. ஏன் நீங்க ஆக்ட் பண்ணக் கூடாதுன்னு கேட்டாங்க. எனக்கு ஏத்த மாதிரி கேரக்டர் கதையில் இல்லை, அதனால நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். நடிக்க வேண்டாம், பாட்டு பாடலாமேன்னு கம்பெல் பண்ணுனாங்க. தமிழ்ல பேசறதே கஷ்டம் இதுல பாட்டான்னு தயங்கினேன். பட், அந்தப் பாட்டு யங்ஸ்டர்ஸுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
 
சத்யஜித்ரேயிடம் உங்க பேவரைட் ஆக்ட்ரஸ் யாருன்னு கேட்டப்போ உங்க பெயரைதான் சொன்னார். அதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
 
ஐ ஃபீல் வெரி  கிரேட். என்னோட லைஃப் அச்சீவ்மெண்ட் மாதிரி அதை நினைக்கிறேன். அவர் அப்படி சொன்ன பிறகுதான் மத்தவங்களும் நான் அழகா இருக்கேன்னு சொன்னாங்க. அப்பதான் நாம அழகாயிருக்கோம்னு எனக்கு தெரிஞ்சது. அவர் இயக்கத்துல நடிக்க முடியாம போனது வருத்தம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil