Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு நான்தான் போட்டி - பவர் ஸ்டார் சீனிவாசன்

ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்கு நான்தான் போட்டி - பவர் ஸ்டார் சீனிவாசன்

Advertiesment
பவர் ஸ்டார்
ரஜினியை இமிடேட் செய்யும் சின்னி ஜெயந்துக்கு போட்டியாகக்கூட நடிகர் சீனிவாசனை கூற முடியாது. ஆனால் அவரோ தொடர்ந்து, ரஜினிக்கு நான்தான் போட்டி என்று கூறி வருகிறார்.


 


அட்ரா மச்சான் விசிலு படத்தில் ரஜினியை பிரதிபலிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்துள்ளார். சும்மாவே பிலிம் காட்டுகிறவர் இப்போது ஒரு ஐமேக்ஸையே கட்டி எழுப்புகிறார்.
 
உங்களுடைய ட்ரேட் மார்க், 'ரஜினிக்கு நான்தான் போட்டி' இப்போதும் நிலுவையில் இருக்கிறதா?
 
ஆரம்ப காலத்திலிருந்து இப்ப வரைக்கும் ரஜினிக்கு நான்தான் போட்டி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
 
அட்ரா மச்சான் விசிலு படத்தில் என்ன கேரக்டர்?
 
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறேன். நடிகரா வர்றேன்.
 
டயலாக் எல்லாம் விவகாரமாக உள்ளதா பேச்சிருக்கே?
 
சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதால எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசலை.
 
என்ன மாதிரி ஸ்டைல் செய்திருக்கீங்க?
 
காமெடிப் படம் என்பதால் ஸ்டைல்னு தனியாக எதுவும் செய்யவில்லை. ஆனா எக்கச்சக்க பஞ்ச் இருக்கு. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு. இந்த படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க.
 
உங்க லட்சியம்தான் என்ன?
 
என்னோட லட்சியம் என்று பார்த்தால் அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான். 
 
முயற்சி பண்றீங்களா?
 
இந்த படத்தோட தயாரிப்பாளர் கோபிகூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார். 
 
ஒருவேளை நடிக்க மறுத்தால்...?
 
அவங்க கிடைக்கா விட்டாலும் கூட, அவங்க பேர்ல வேற யாராவது இருந்தால் அவர்களை கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுஎஸ்ஸில் தெலுங்கில் கச்சேரி நடத்தும் இளையராஜா