Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல்சர்மா எப்படி தன்னை மடக்கினார் : அசின் ஜாலி பேட்டி

Advertiesment
Actror asin
நடிகை அசின், தன்னுடைய கணவர் ராகுல்சர்மா எப்படி அறிமுகமானார் என்பது பற்றியும், தனது காதல் அனுபவங்களை பற்றியும் பேடி அளித்துள்ளார்.


 

 
தமிழில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை அசின், பாலிவுட் கனவு கண்ணியாக வேண்டும் என்று மும்பை சென்றார். ஆனால் அவர் நினைத்தது போல் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு பணக்கார மாப்பிள்ளை ராகுல் சர்மாவே கிடைத்தார்.
அதுபற்றி அசின் ஒரு பேட்டியில் கூறும்போது “ கஜினி படத்தில் எனக்கும் மொபைல் நிறுவன அதிபர் சஞ்சய்ராமசாமி என்பவருக்கும் காதல் ஏற்படுவதாக காட்சி இருந்தது. என் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே நடந்துவிட்டது.
 
நான் இந்தியில் நடித்த ஹவுஸ்புல் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக,   நடிகர் அக்‌ஷய்குமாரோடு வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. அப்போது விமான நிலையத்தில், முதன் முதலாக ராகுல் சர்மாவை சந்தித்தேன். அக்‌ஷய்குமார்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் சிரித்துக்கொண்டோம். அவ்வளவுதான். 
 
அதன்பின் விமானத்தில் செல்லும் போது அக்‌ஷய்குமார், நானும் ராகுல் சர்மாவும் பொருத்தமான ஜோடி என்று என்னிடம் கூறினார். அப்போது நான் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் ஒரு நாள் திடீரென என் வீட்டிற்கு ராகுல்சர்மா வந்து, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக என் பெற்றோரிடம் கூறினார்.
 
இதைக்கேட்டு நானும், எனது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தோம். ஏனெனில் நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. எனவே அப்போது எந்த பதிலையும் என்னால் கூற முடியவில்லை. என் முடிவை கூற அவரின் அவகாசம் கேட்டேன். அதன்பின் அவரை பற்றி விசாரித்தேன். 
 
அப்போது யாருடையும் ஆதரவும், உதவியும் இன்றி தானாகவே உழைத்து இந்த நிலைமைக்கு ராகுல் சர்மா வந்துள்ளார் என்று தெரிந்து கொண்டேன். பெரிய பணக்காரராக இருந்தும் என்னிடம் எளிமையாகவே பழகினார். எனவே அவர்தான் எனக்கு சரியான ஜோடி என்று எனக்கு தோன்றியது. அதன் பின்னரே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். 
 
திருமணத்திற்கு பிறகு எனது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது” என்று அசின் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil