Publish Date: Sat, 24 Oct 2015 (12:49 IST)
Updated Date: Sat, 24 Oct 2015 (13:09 IST)
நானும் ரௌடிதான் வெளியானதை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் தனுஷ்.
விஜய், அஜித், ரஜினி என்று சக நடிகர்கள் குறித்த கேள்விக்கும் தடங்கல் இல்லாமல் பதிலளித்தார். அந்த கேள்விப் பதில்கள் இங்கு உங்களுக்காக.
விஜய் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பீர்களா?
விஜய் கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன்.
சமந்தாவை குறித்து சொல்லுங்கள்...?
மிகத்திறமையான நடிகை. அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
தங்கமகனின் இசைக்காகத்தான் தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நவம்பர் மாதம் பாடல்கள் வெளியாகும். மெலடி விரும்பிகளுக்கு தங்கமகனின் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்.
விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?
இருவரையும் பிடிக்கும். அவர்களிடம் நான் நிறைய கற்று வருகிறேன். உண்மையைச் சொன்னால்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
நான் ரஜினியின் தீவிர ரசிகன்.
சூர்யா குறித்து உங்கள் அபிப்ராயம்...?
கடுமையான உழைப்பாளி. அவரது உழைப்பு மற்றவர்களை ஊக்குவிப்பதுபோல் இருக்கும்.
விஜய், அஜித் படங்களை தயாரிப்பீர்களா?
அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் அது பாக்கியம்.
எப்போது உங்கள் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பீர்கள்?
கூடிய விரைவில்.
விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி...?
விஜய் சேதுபதி திறமையான நடிகர். நயன்தாராவை எல்லோருக்குமே பிடிக்கும்.
பள்ளிப் பருவத்தில் உங்களை ஜொள்ளுவிட வைத்தவர்கள்?
குஷ்பு, சிம்ரன்.
விஜய் படங்களில் பிடித்தது எது?
கில்லி.
அஜித் படங்களில் எது பிடிக்கும்?
தீனா.
தொடர்ந்து ரஜினி படங்களின் பெயர்களையே தேர்வு செய்கிறீர்களே?
நான் தேர்வு செய்வதில்லை. தானாகவே அமைவது.