Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியுடன் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது - ஹன்சிகா பேட்டி

Advertiesment
ஹன்சிகா
ஹன்சிகா நடித்துள்ள புலி நாளை வெளியாகிறது. இந்நிலையில் தனது மனதில் உள்ளவற்றை மறைக்காமல் பேட்டியில் வெளிப்படுத்தினார் ஹன்சிகா.
 
அந்த பேட்டி உங்களுக்காக.


 

 
இத்தனை வருடங்களாக தமிழில் நடிக்கிறீர்கள். தமிழை ஏன் இன்னும் சரியாக கற்றுக் கொள்ளவில்லை?
 
தமிழ் ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். நான் இப்போது தமிழ் பேச வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
 
வணக்கம், நன்றி என்பது போன்ற ஒரு சில வார்த்தைகளை பேசுகிறேன். யாராவது தமிழில் பேசினால் ஓரளவு புரியும். விரைவில் நன்றாக தமிழ் பேச படித்துவிடுவேன்.
 
நடிகைகள் இன்னொரு நடிகையுடன் சேர்ந்து நடிக்க யோசிக்கிறார்களே?
 
நான் அரண்மனை–2 ல் திரிஷாவுடன் நடிக்கிறேன். புலியில்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

சுருதிஹாசனுடன் நடித்திருக்கிறேன். நல்ல பாத்திரம் என்றால் யாருடனும் சேர்ந்து நடிப்பேன். நான் வேறொருவருடன் இணைந்து நடிக்க யோசிப்பதில்லை.
 
உங்களை சின்ன குஷ்பு என்று அழைப்பது பற்றி...?
 
தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்பு மேடம் போல ரசிகர்கள் என்னையும் நினைப்பது சந்தோஷமான விஷயம். என்னை சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இப்படி அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

webdunia

 

 
புலிப் பட அனுபவம் எப்படியிருந்தது?
 
புலி படத்தில் ஸ்ரீதேவி, சுருதிஹாசனுடன் நடித்தது புதிய அனுபவம். அவர்கள் என்னிடம் அன்பாக பழகினார்கள். விஜய் மற்றவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவர்.
 
அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நன்றாக நடனம் ஆடுவார். அவருடன் ஆடுவது சிரமம். புலி படத்தில் விதவிதமான நகைகள் அணிந்து ராணி வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு மேக்கப் போட பல மணி நேரம் ஆனது. சில வசனங்களை மனப்பாடம் செய்து பேசினேன்.
 
எப்போது ரஜினியுடன் நடிக்கப் போகிறீர்கள்?
 
எல்லோரும் இதையேத்தான் கேட்கிறார்கள். எனக்கும் நடிக்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிப்பேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil