Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவை திருமணம் செய்தேனா? - இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி

Advertiesment
நயன்தாரா
தமிழக இளைஞர்களின் தற்போதைய ஒரே எதிரி, விக்னேஷ் சிவன். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்ற கிசுகிசுவை கேட்ட பிறகும் எரியாத இளைஞர்கள் வயிறு தமிழகத்தில் இருக்குமா என்ன. விக்னேஷ் சிவனிடம் அவரது திருமணம் குறித்து கேட்காத நிருபர்கள் என்ன நிருபர்கள்?


 
 
நானும் ரௌடிதான் படத்தின் வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார், விக்னேஷ் சிவன். படத்தைவிட அவரது ரகசிய திருமணம் குறித்து கேட்பதில்தான் அனைவருக்கும் ஆர்வம். நயன்தாராவை கவிழ்த்தவருக்கு நிருபர்களிடமிருந்து நழுவுவதா பெரிய பிரச்சனை. 
 
விக்னேஷ் சிவனின் நழுவல் பதில்களை நீங்களே படியுங்கள்.
 
உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுவது உண்மையா?
 
பொதுவாக திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர் உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும். எனக்கும் நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மை இல்லை.
 
சரி, நீங்களும், நயன்தாராவும் காதலிப்பது உண்மையா?
 
அது தனிப்பட்ட விஷயம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்...

இரண்டு பேரும் நெருக்கமாக உரசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியானதே, அது உண்மையா இல்லை அதுவும் பொய்யா?
 
அந்தப் படத்தை உற்றுப் பாருங்கள், உண்மை தெரியும்.

webdunia

 
 
நானும் ரௌடிதான் வெளிவந்த பிறகு கோவில் கோவிலாக சுற்றுகிறீர்களே, என்ன விஷயம்?
 
படம் நல்லவிதமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடினால், சில கோவில்களுக்கு வந்து வணங்கி விடுவதாக வேண்டிக்கொண்டிருந்தேன். ‘நானும் ரவுடிதான்’ படத்தை திரையிட்ட எல்லா தியேட்டர்களில் இருந்தும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் என் வேண்டுதலை நிறைவேற்ற முதலில் திருப்பதி கோவிலுக்கு சென்றேன். பின்னர் சென்னையில் உள்ள அகத்தியர் கோவிலுக்கும், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலுக்கும் போய் வணங்கினேன். 
 
இந்த படத்தின் வெற்றியை உங்கள் கதாநாயகி நயன்தாரா எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்? 
 
அவங்களுக்கு சந்தோஷம்தான்.
 
அடுத்து என்ன படம், முடிவு செய்து விட்டீர்களா?
 
ஒரு ‘ஐடியா’ இருக்கிறது. என்னுடைய அடுத்த படம் கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும்.
 
நானும் ரௌடிதான் படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளதே. அதனை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
 
நடிகர் சித்தார்த், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அடுத்ததாகவும் வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil