Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் - உடல் இளைத்த நமிதாவின் நம்பிக்கை பேட்டி

நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் - உடல் இளைத்த நமிதாவின் நம்பிக்கை பேட்டி
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (09:02 IST)
நேற்று நமிதாவின் பிரஸ்மீட். உடல் பெருத்து எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸில் இருந்தவர், 20 கிலோ எடை குறைத்து இளமை திரும்பப் பெற்றவராக வந்திருந்தார்.
 

 

இளைத்த உடம்புக்கு ஏற்ப நம்பிக்கை திரும்ப கிடைத்திருக்கிறது நமிதாவுக்கு. தான் இளமை மீண்ட ரகசியத்தையும், எதிர்கால அரசியல் ஆசையையும் பேட்டியின் போது நமிதா பகிர்ந்து கொண்டார்.
 
உடல் எடை நடிகைகளுக்கு பெரும் பிரச்சனை. அதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?
 
என் எடைஅதிகமாகிக் கொண்டே இருந்தது. படவாய்ப்புகளும் குறைந்தன. நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன்.

இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை.எடையைக் குறைக்க எவ்வளவோ விதத்தில் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.
 
என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள் எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை. மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டமாக அது இருந்தது.
 
பிறகு எப்படி எடை குறைந்து பழைய இளமைக்கு திரும்பினீர்கள்?
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் சாக்ஷி வெல்னஸ் பற்றி கேள்விப்பட்டேன். எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது.

webdunia

 
 
எடை மட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன். ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை. முதலில்  ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. பிறகுதான் நம்பிக்கை வந்தது. இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது.
 
உங்களுடைய உணவுக் கட்டுப்பாட்டை சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே?
 
என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவு பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ கிடையாது.
 
உங்களுக்கு ப்ரியமானது எதையாவது விட வேண்டி வந்ததா?
 
நான் ஒரு பீட்ஸாப் பிரியை..
மேலும் அடுத்தப்பக்கம் பார்க்க..

பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர்  நான். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிட்ட நான் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்.

webdunia

 

 
கொஞ்ச நாள்களாக உங்களை படங்களில் பார்க்க முடியவில்லையே?
 
இப்போது புதிய தோற்றத்துக்கு வந்துவிட்டேனல்லவா. இனி வாய்ப்புகள் தொடர்ந்து வரும் என்று நம்புகிறேன்.
 
என்ன மாதிரியான வேடங்களில் நடிக்க ஆசை?
 
ஆக்ஷன் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம்.
 
உங்களின் அரசியல் ஈடுபாடு எந்த அளவில் இருக்கிறது?
 
எனக்கு அரசியல் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். பல கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எப்போது அரசியலில் இறங்குவது என்று இப்போதே சொல்ல முடியாது.
 
மார்க்கெட் இழந்த நடிகைகள், வாய்ப்பு குறைந்த நடிகைகள் சொந்த ஊருக்குப் போய் விடுவதைப் போல நீங்களும் போவீர்களா?
 
என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. எனக்கு  இங்குள்ள  பொங்கல்தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு சென்னையை விட்டு செல்ல மாட்டேன்.

Share this Story:

Follow Webdunia tamil