சினிமாவைவிட்டு எங்கும் போக முடியாது - கௌதமி பேட்டி
சினிமாவைவிட்டு எங்கும் போக முடியாது - கௌதமி பேட்டி
Publish Date: Thu, 28 Jul 2016 (12:50 IST)
Updated Date: Thu, 28 Jul 2016 (13:00 IST)
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த கௌதமி 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் நடித்துள்ளார். படம் 'நமது'. 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதமி அளித்த பேட்டி.
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி என்னைத் தொடர்பு கொண்டு நமது படத்தின் கதையைக் கூறினார். படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
பாபநாசம் படத்தால் கிடைத்த வாய்ப்பா இது?
பாபநாசம் படத்தைப் பார்த்து அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டாரா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனால் படத்தின் கதையை எழுதும்போதே என்னை மனதில் வைத்துத்தான் எழுதியதாக இயக்குநர் தெரிவித்தார்.
மோகன்லால் நடித்திருப்பது...?
அவரும் ஒரு வருடம் கழித்துப் பார்க்கலாம் என்றுதான் கூறியிருக்கிறார். அப்படி சொன்னவர் கதையை கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.
படம் எந்த நிலையில் உள்ளது?
படத்தின் முழுப்பணிகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் உங்களுக்கு யார் டப்பிங் பேசியிருக்கிறார்கள்?
தமிழ், தெலுங்கில் நானே பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளம் கற்று மலையாளத்தில் டப்பிங் பேசவிருக்கிறேன்.
நமது எந்த மாதிரியான படம்?
நான்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வன்முறை இல்லாத படமாக நமது இருக்கும்.
நான்கு கதாப்பத்திரங்களை சுற்றி படத்தின் கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார். அந்த நால்வரும் சந்திக்கும்போது படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும்.
இதுவரை 120 படங்களுக்கும் அதிகமாக நடித்து விட்டேன் என்றாலும் எனக்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன். சினிமாவை விட்டு எங்கும் போக முடியாது. ஏனெனில் அது என்னுடைய ரத்தத்திலேயே ஊறியது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்