Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிக்கி கல்ராணியைப் போல் ஒரு கதாநாயகியை பார்த்ததில்லை - விஷ்ணு விஷால் பேட்டி

நிக்கி கல்ராணியைப் போல் ஒரு கதாநாயகியை பார்த்ததில்லை - விஷ்ணு விஷால் பேட்டி

நிக்கி கல்ராணியைப் போல் ஒரு கதாநாயகியை பார்த்ததில்லை - விஷ்ணு விஷால் பேட்டி
, செவ்வாய், 31 மே 2016 (10:28 IST)
விஷ்ணு விஷால் நடித்துள்ள, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வரும் ஜுலை 3 -ஆம் தேதி வெளியாகிறது. அதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


 


அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஷ்ணு விஷால் பதிலளித்தார்.
 
இந்தப் படம் உங்களுக்கு மட்டுமில்லாமல் இயக்குனர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோருக்கும் ஸ்பெஷல் என்று கேள்விப்பட்டோம்...?
 
ஆமா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் நான் நடித்துள்ள 10-வது படம். எனக்கு மட்டும்தான் பத்தாவது படம் என்று நினைத்தேன். டைரக்டர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோருக்கும் இது 10-வது படம் என்று பின்னர் தெரியவந்தது.
 
படங்களை தேர்வு செய்வதில் இப்போது அதிக அக்கறை காட்டுவதாக கூறுகிறார்களே?
 
அது உண்மைதான். நீர்ப்பறவை படத்துக்குப்பின், நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதேபோல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான்.
 
தேர்வு செய்து நடிப்பதால் பலன் இருக்கிறதா?
 
இதுவரை தொடர்ந்து 3 வெற்றி படங்கள் கொடுத்து விட்டேன். இது தொடர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
 
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறீர்கள், அது பற்றி...?
 
இந்த படத்தை முதலில் வேறு ஒருவர்தான் தயாரிப்பதாக இருந்தார். எதிர்பாராதவிதமாக நானே தயாரிப்பாளராக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் நண்பர்கள் உதவியுடன் படத்தை தயாரித்து நடித்து இருக்கிறேன்.
 
நாயகி நிக்கி கல்ராணி எப்படி...?
 
நான் இதுவரை நந்திதா, சுனைனா, மியா ஜார்ஜ், ஸ்ரீதிவ்யா என பல கதாநாயகிகளுடன் நடித்து விட்டேன். நிக்கி கல்ராணியைப்போல் பார்த்ததில்லை.
 
எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?
 
அவரைப் போல் கலகலப்பான சுறுசுறுப்பான கதாநாயகியை பார்த்ததில்லை. பயங்கர சுறுசுறுப்பு. லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பார். முதல் படத்திலேயே பயமுறுத்திய அவர் பழகுவதற்கு நேர் மாறாக இருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் விருது